ஊழல் எதிர்ப்பு மையயத்தின் நிருவாக இயக்குனர் சிந்தியா கேப்ரியல் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தைரியமான பெண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
வலிமை, விதிவிலக்கான தைரியம் மற்றும் நெழிந்தவர்களின் வாழ்கை தரத்தை முன்னேற்ற உழைக்கும் பெண்களை கௌரவிக்க வழங்கப்படுகின்ற இந்த விருத்திற்காக மலேசியாவில் உள்ள அமரிக்க தூதரகம் சிந்தியாவை பரிந்துரை செய்துள்ளது .
சிந்தியா ஒரு முக்கிய மனித உரிமை சமூக போராளியும் வழக்கறிஞரும், மற்றும் C4 என்ற ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவரும் ஆவார். இதுவரை இவர் பல ஊழல் மோசடிகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இவர் சுவராம் என்ற மனித உரிமை அமைப்பில் நீண்ட காலம் தொண்டாற்றியவர்.
“அவர் தனது வாழ்க்கையின் பல நேரங்களை மனித உரிமைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, ஊழல் எதிர்ப்பு மற்றும் ஜனநாயக சுதந்திரங்களை மேம்படுத்துவதற்காக செலவிட்டுள்ளார்” என்கிறது அந்த பரிந்துரை.
சமீபத்தில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர் அசாம் பாக்கியின் பங்கு உரிமை மற்றும் ஊழல் குறித்து சிந்தியா குரல் எழுப்பியிருந்தார்.
தனது சமூகங்களை மேம்படுத்த அயராது உழைக்கும் பெண்களுக்கு, உலகளாவிய கவனத்தையும் ஆதரவையும் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியாக இருக்கும் என்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறையின் கீழ் சர்வதேச தைரியமான பெண்கள் விருது 2007 இல் தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்தந்த நாடுகளில் இருந்து ஒரு பெண்ணை பரிந்துரை செய்வார்கள் .
அம்பிகா ஸ்ரீனிவாசன், சுசன்னா லியூ, நிஷா அயூப், எம் இந்திரா காந்தி மற்றும் க்யீரா யுஸ்ரி ஆகியோர் கடந்த கால வெற்றியாளர்கள் மற்றும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்.