பெரும்பாலான பயன்படுத்திய கார்களை வாங்கி விற்கும் வியாபாரிகள் வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களை, குறைந்த விலையில் கூட ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று மோட்டார் வாகன சங்கம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் சமீபத்திய வெள்ளத்தால் சேதமடைந்த கார்களை உரிமையாளர்கள் விற்க முயற்சிப்பார்கள், ஆனால் அவர்கள் வியாபாரிகளிடமிருந்து தயக்கத்தை எதிர்கொள்வார்கள் என்று மோட்டார் வாகன விற்பனையாளர்களைக் கொண்ட மலேசிய மோட்டார் மற்றும் கடன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறுகிறது.
கடந்த ஆண்டு வெள்ளத்தால் தாமன் ஸ்ரீ மூடா மற்றும் நாட்டின் பிற பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டபோது, கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை விற்க முயற்சி செய்தார்கள்.
“ஆனால் வியாபாரிகள் சேதமடைந்த கார்களை முழுமையாக ஆய்வு செய்து, கார் வெள்ளத்தில் சேதமடைந்த விவரத்தை எளிதில் தெரிந்து கொள்வார்கள்”. வெள்ளத்தில் சேதமடைந்த வாகனம் அதிக சிக்கல்களை ஏற்படுத்துவதால் பெரும்பாலானோர் அதை வாங்க மறுப்பதாக,FMCCAM இன் ஃபெடரல் டெரிட்டரிஸ் மற்றும் சிலாங்கூர் கிளையின் துணைத் தலைவர் லிம் கீட் ஹின் கூறினார்
அத்தகைய கார்களின் பழுதுபார்க்கும் செலவு அவற்றின் ஆண்டு, தயாரிப்பு மற்றும் மாடல் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும், பழைய வாகனங்களுக்கு ரிம.10,000க்கு அதிகமாகவும், உயர்தர கார்களுக்கு ரிம.80,000மாகவும் இருக்கும் என்று அவர் FMTயிடம் கூறினார்.
கார்கள் பழுதுபார்க்கப்பட்டு வாடிக்கியர்களிடம் விற்றாலும், தொடர்ந்து வரும் “பிரச்சனை கார்களின்” மூலம் திருப்தியற்ற வாடிக்கையாளர்களை பெற வியாபாரிகள் விரும்பவில்லை என்று அவர் கூறினார்
கடந்த திங்களன்று கோலாலம்பூரில் ஜலான் குச்சாய் லாமா, ஜாலான் ஏர் கெரோ-ஏர் பனாஸ், ஜாலான் லெபோ அம்பாங், தாமன் சலாக் செலாடன் மற்றும் ஜாலான் அம்பாங்கில் உள்ள தமான் யூ-தாண்ட் உள்ளிட்ட பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
ஜலான் குச்சாய் லாமாவில் மட்டும், 2 மீட்டர் உயரத்திற்கு வெள்ள நீர் இருந்ததாகவும், 12 கார்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பட்டறையின் உரிமையாளரான ஷியான் வோங், வெள்ளத்தால் சேதமடைந்த கார்களை பழுதுபார்ப்பதற்கு அருக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார். மேலும் “வெள்ளத்தால் சேதமடைந்த கார்களைப் பொறுத்தவரை, மின்னணு பாகங்கள் மற்றும் இயந்திர கட்டுப்பாட்டு அலகு மீது நிறைய நிச்சயமற்ற தன்மை உள்ளதாக”, அவர் கூறினார்.
“உதிரிபாகங்களுக்காக அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும், அதனால் உரிமையாளர்கள் தங்கள் கார்களை இவ்வளவு நேரம் பட்டறைகளில் விட்டுவிட தயாராக இருக்க வாய்ப்பில்லை என்றும்”, அவர் கூறினார்.
அத்தகைய கார்களை பழுதுபார்ப்பதற்காக ஏற்றுக்கொள்வது பட்டறைகளுக்கு ஆபத்து என்று வோங் கூறினார், ஏனெனில் அதன் முழுப்பொறுப்பையும் ஏற்பது கடினம் என்கிறார் பட்டறையின் உரிமையாளர்.
“பழுதுபார்க்கும் செயல்பாட்டின் போது மேலும் சிக்கல்கள் எழக்கூடும், இது செலவை மட்டுமே அதிகரிக்கும்,” என்று அவர் கூறினார்.
-freemalaysiatoday