ஜொகூர் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விகிதம் 22 சதவீதமாக உள்ளது

இன்று நடைபெறும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வமாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும், இன்று காலை 7 மணிக்கே வாக்காளர்கள் வாக்களிப்பு மையங்களில் வரிசையில் நிற்கத் தொடங்கியதாக பெர்னாமா தெரிவித்தது.

முதலில் வாக்களிக்கச் சென்றவர்களில் இரண்டு முன்னாள் ஜொகூர் மந்திரி பெசார்களான Mohamed Khaled Nordin and Sahruddin Jamal  ஆகியோர் அடங்குவர்.

இதற்கிடையில், தேசியக் கூட்டணியின்  (PN), தலைவர் முஹைதீன் யாசின், ஜொகூரில் உள்ள எஸ்எம்கே ஸ்ரீ மூவாருக்கு காலை 9.05 மணிக்கு வந்து 9.16 மணிக்கு தனது மனைவி நூரைனி அப்துல் ரஹ்மானுடன் வாக்களித்தார்.

2,539,606 சாதாரண பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் மொத்தம் 1,021 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன.

இந்த PRNல், 56 மாநிலத் தொகுதிகளுக்கு 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பெரும்பாலான வாக்குச்சாவடிகள் இன்று மாலை 4 மணிக்கு மூடப்படும்

மொத்தம் 15 வாக்குச்சாவடிகள் பிற்பகல் 2 மணிக்கும், 41 வாக்குச்சாவடிகள் மாலை 4 மணிக்கும் மூடப்படும்.