கைருடின் அமன் ரசாலி பாஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து தற்போது சுயேச்சை எம்.பி-யாக உள்ளார்.
கோலா நெரஸின் உறுப்பினர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பதற்காக பாஸ் பொதுச் செயலாளர் தகியுதீன் ஹாசனை இன்று சந்தித்தார்.
“இதனுடன், நான், கைருடின் அமன் ரசாலி, உறுப்பினர் எண் 313899, எனது பாஸ் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய விண்ணப்பித்துள்ளேன்,” என்று அவர் நாடாளுமன்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னாள் தோட்டத்துறை மூலப்பொருள் அமைச்சரான அவர், இத்தனை நாட்களாக தனக்கு ஆதரவளித்த கட்சிக்கு நன்றி தெரிவித்தார். கைருதீன் 33 ஆண்டுகளுக்கு முன்பு 1989 இல் உறுப்பினராக சேர்ந்தார்.
பாஸ் சியுரா கவுன்சில் செயலாளர் பதவியில் இருந்து கைருடின் ராஜினாமா செய்ததை அடுத்து இன்றைய ராஜினாமா வெளியே வந்துள்ளது. பாஸ் மத்தியக் குழு,அவரைப் பதவி நீக்கம் செய்ததை அடுத்து இது நடந்துள்ளது.
கட்சியை விட்டு ஏன் விலகுகிறார் என்பதை விளக்குமாறு கேட்டதற்கு, இந்தக் கேள்விக்கு “பதிலளிப்பது கடினம்” என்று கைருடின் கூறினார்.
“நான் பாஸை நேசிக்கிறேன், அதன் திசை மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் பாஸை என்றும் நான் ஆதரிப்பேன்,” என்று அவர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தனது மாதாந்திர உதவித்தொகையை அடுத்த பொதுத் தேர்தல் வரை பாஸ்க்கு வழங்குவதாக கைருடின் கூறினார்.
கோலா நெரஸ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்க படுவதற்கு முன்பு அவர் கட்சியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி இது இருந்தது.
கைருடின் 2013 பொதுத் தேர்தலில் குவாலா நெரஸ் தொகுதியில் வெற்றி பெற்று 2018 இல் அதைத் தக்க வைத்துக் கொண்டார்.
-freemalaysiatoday