51,631 ஆன்லைன் மோசடி வழக்குகள், RM1.61B அதிகமான இழப்புகள்

2019 முதல் கடந்த ஆண்டு வரை மொத்தம் 51,631 ஆன்லைன் மோசடி வழக்குகள் RM1.61 பில்லியனுக்கும் அதிகமான இழப்புகள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றதில் நேற்று  தெரிவிக்கப்பட்டது.

துணை உள்துறை அமைச்சர் டத்தோ ஜொனாதன் யாசின்(Jonathan Yasin), ஆன்லைன் கொள்முதல் வழக்குகளில் அதிகபட்சமாக 18,857 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து 15,546 போலி கடன் வழக்குகள் பதிவாகியுள்ளன.

“நாங்கள் ஒரு ‘சிசிஐடி ஸ்கேம் ரெஸ்பான்ஸ் சென்டரை’ அமைத்துள்ளோம், மேலும் சந்தேகத்திற்குரிய எந்தவொரு பரிவர்த்தனைகளுக்கான அழைப்பின் செல்லுபடியையும் தகவல்களையும் பெற பொதுமக்கள் அழைக்கலாம்,” என்று சு கியோங் சியோங்கின் (PH-Kampar) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஜொனாதன் தமது இலாக்கா எப்போதும் திட்டமிடல், ஆய்வுகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களை மறுஆய்வு செய்து, தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் சிக்கல்களுக்கு எப்போதும் பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்யும் என்றார்.

“இந்த நாட்டில் நடக்கும் அனைத்து வகையான குற்றங்களையும் கட்டுப்படுத்த, பயனீட்டாளர்  பாதுகாப்பு சட்டம் 2007 இன் விதிகளை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்,” என்று அவர் கூறினார்.

அமலாக்கச் சட்டம் திருத்தப்பட வேண்டுமா அல்லது தற்போதைய சவால்களுக்குப் பொருத்தமானதாக புதுப்பிக்கப்பட வேண்டுமா என்ற  டத்தோ சே அப்துல்லா மட் நவி (PAS-Tumpat) இன் கூடுதல் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.