தப்பியோடிய களவாளி லோ டேக் ஜோ ,1எம்டிபி ஊழல் பத்திரப் பரிவர்த்தனைகளில் இருந்து US$1.42 பில்லியனைத் திருடியதாக, அந்த நிதியைக் கண்டுபிடித்த ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் முகவர் சாட்சியம் அளித்தார்.
எரிக் வான் டோர்ன், முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர் ரோஜர் என்ஜின் லஞ்ச விசாரணையில் திங்களன்று சாட்சியளிக்கையில் இந்தத் தொகையை மேற்கோள் காட்டினார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களில் 756 மில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக பெற்றதாக வான் டோர்ன் நியூயார்க்கின் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் ஜூரியிடம் தெரிவித்தார்.
1எம்டிபி பரிவர்த்தனைகளுக்கு உத்தரவாதம் அளித்த அபு டாபியின் அரசுக்குச் சொந்தமான சர்வதேச பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான காடெம் அல்-குபைசி 472.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
1எம்டிபியின் மிகப்பெரிய கொள்ளையினால் விசாரணைக்கு செல்லும் ஒரே கோல்ட்மேன் வங்கியாளர் ரோஜர் ஆவார்.
குறைந்தபட்சம் 16 பெறுநர்களுக்குப் பணம் எப்படிப் பகிறப்பட்டது என்பதைத் தான் கண்காணித்ததாகக் கூறி வான் டோர்ன், மூன்று பத்திரப் பரிவர்த்தனைகளில் இரண்டில் இருந்து 35.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை இங் (Ng) பெற்றதாக நடுவர் மன்றத்திடம் கூறினார், அதே நேரத்தில் முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர் டிம் லீஸ்னர் US$73.4 மில்லியன் கைப்பற்றியிருந்தார் , பின்பு அவர் மோசடி மற்றும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ரோஜருக்கு எதிராக US உடன் தற்போது விசாரணையில் ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார்.
1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பாக மலேசியாவில் நஜிப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். தண்டனையை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார்.
நஜிப்பின் செய்தித் தொடர்பாளர் இது சார்பாக குறித்து கருத்துத் தெரிவிக்க கோரும் மின்னஞ்சலுக்கு உடனடி பதில் அனுப்பவில்லை.
-fremalaysiatoday