யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், நான்தான் எம்டியுசி தலைவர் – ஹலீம்

எம்டியுசி தலைவர் நாந்தான் என்கிறார்  ஹலீம் மன்சோர். சர்ச்சைக்குரிய பதவிக்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முகமட் ஜாபர் மஜித் விலகியதைத் தொடர்ந்து தான் இப்போது தலைவராக  இருப்பதாகவும் அதை கூட்டு தொழிற்சங்கத்தின் “தற்போதைய தலைவர்கள்” ஏற்றுக்கொள்வார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

“நான் இப்போது அதிகாரப்பூர்வமாக தலைவராக  இருக்கிறேன், தற்போதைய நிலையில்  அனைவரும் இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். கோவிட் -19 காரணமாக  கடந்த காலத்தில் வீணடிக்கப்பட்ட 30 மாதங்களை விடுத்து, பல பின்னடைவுகளை கண்ட இயக்கத்திற்கான புதிய திட்டத்தை பட்டியலிட தொடங்குவோம், ”என்று அவர் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது கூறினார்.

தொலைத்தொடர்பு ஊழியர்களின் தேசிய சங்கத்தின் தலைவரான ஜாஃபரின் சைகைக்கு (போட்டியிலிருந்து விலகுவதாக) ஹலீம் நன்றி தெரிவித்தார், இது எம்டியுசியை  சரியான பாதையில் கொண்டு செல்லும் என்று கூறினார்.

2019ல் அவர்களுக்கிடையேயான போட்டி முடிவடைந்து விட்டது. தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து ஜாபர் உத்தியோகபூர்வமாக விலகியதாக சங்கங்களின் பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது  என்று ஹலீம் கூறினார்.  .

2019 தொழிற்சங்கத் தேர்தலில், ஹலீமும் ஜாஃபரும் அதே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றனர், மூன்றாவது போட்டியாளரான நார் அஸ்லான் யாக்கோப் தோல்வியடைந்தார். இருப்பினும், எம்டியுசி தலைமை மூன்று பேரையும் உள்ளடக்கிய மறுதேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. கடந்த அக்டோபரில் நோர் அஸ்லான் காலமானபோது, ​​ஹலீமும் ஜாஃபரும் மீண்டும் தேர்தலுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் தற்போது உள்ள தலைமை அதை தாமதப்படுத்தியது.

இன்று, ஜாபர் எம்டியுசி தலைமை மற்றும் சங்கங்களின் பதிவாளரிடம் பதவிக்கன விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்தார்.

எம்டியுசியை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சர்ச்சையில் இருந்து விலகுவதாக கூறிய இந்த முன்னாள் துணைத் தலைவர், ஹலீம் இப்போது காங்கிரஸைக் வழி நடத்தலாம் என்றும் கூறினார்.

பொதுக்குழு கூட்டத்திற்கான தேதிகளை நிர்ணயம் செய்ய, கூடிய விரைவில் செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஹலீம் திட்டமிட்டுள்ளார்.

“எம்டியுசி அரசியலமைப்பின் கீழ், அடுத்த  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரதிநிதிகள் மாநாடு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட வேண்டும். நான் இப்பணியில் உடனடியாக இறங்க உள்ளேன்” வேலைக்குச் செல்ல விரும்புகிறேன், ”என்றும் அவர் கூறினார்.

-fremalaysiatoday