இந்திய சமூகத்திற்கு அரசாங்கம் அளித்த நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் வாதத்தில், ஒரு எம்.பி.யை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றியும் மற்றும் மற்றொருவரை “போய் தோசை சாப்பிடுங்க” என்று கூறப்பட்டது.
எம் குல சேகரன் (ஈப்போ பாராட்) இந்திய சமூகம் குறித்த இரண்டு தரப்பு கட்சிகள் கூட்டம் முன்பு திட்டமிட்டபடி நவம்பரில் நடைபெறாதது குறித்து அவர் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறினார்.
மலாக்கா தேர்தல் முடிந்த பிறகு கூட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்னும் நிறைவேறவில்லை என்றார்.
இதற்குப் பதிலளித்த தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹலிமா சாடிக், கூட்டம் வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் என்று கூறினார்.
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் மித்ரா நிதி துஷ்பிரயோகம் குறித்த விசாரணையின் முடிவுகள் பற்றி குலசேகரன் கேட்டார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரித்து வருவதால், தன்னால் எதையும் வெளிப்படுத்த முடியாது என்று ஹலிமா கூறினார்.
இந்த நிலையில், இந்தியப் பிரச்சனைகள் குறித்த து செயல்திட்ட அமைச்சரவை குழுவை பிரதமர் உருவாக்குவார் என்று ஹலிமா விளக்க முற்பட்ட போது குலசேகரன் குறுக்கிட்டார்.
இப்படி தொடர்ந்து குரல் எழுப்புவதற்கு வழிவகுத்த காரணத்தால், ஹலிமா குலசேகரனை உட்காரச் சொல்லி அவர் சொல்வதைக் கேட்கும்படியும் கூறினார்.
“நீங்கள் காலை உணவு சாப்பிட்டீர்களா?” என்று குலசேகரனிடம் கேட்டார். உங்களுடைய திடீர் கோபத்திற்கும் பசிக்கும் தொடர்பு இருக்கலாம் என்றார்” என்றார் ஹலீமா.
மேலும் அவர் வி சிவகுமார் (பத்து காஜா) அவர்களின் மித்ராவில் இருந்து எவ்வளவு சிலவு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், 2020 மற்றும் கடந்த ஆண்டு செலவு செய்யப்பட்டது குறித்த விசாரணை சட்ட அமைச்சர் மற்றும் எம்ஏசிசியின் கீழ் உள்ளதாக பதிலளித்தார்.
மித்ரா நிதி தனிநபர் கடனை தீர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உட்பட செலவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கூறப்படுவது முக்கியம் என்று சிவக்குமார் வாதிட்டார்.
ஹலிமா அவருக்கு பதிலளிக்க மறுத்து, மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க சென்றார், இதை ஆட்சேபித்த சிவகுமாரும் குலசேகரனும் எழுந்து நின்று பதிலுக்காக காத்திருக்க முற்பட்டனர்.
“கூட்டு விசாரணையின் ஒரு பகுதியாக இருப்பதால் எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்ற விவரங்களை என்னால் உங்களுக்கு வழங்க முடியாது. உங்களுக்கு விவரங்கள் வேண்டுமானால், சட்ட அமைச்சரிடம் கேளுங்கள்,” என்று ஹலிமா, இரண்டு எம்.பி.க்களும் ஒரே நேரத்தில் அவரை குறுக்கிட பேசும்போது பதிலளித்தார்.
அப்போது சபாநாயகர் அசார் அசிசான் ஹாருன், சிவகுமாரையும், குலசேகரனையும் உட்காருமாறு உத்தரவிட்டு, ஹலிமாவுக்கு நேரம் இருப்பதை நினைவூட்டினார். அவர்களுடைய பேச்சில் குறுக்கிட அவர்கள் அனுமதி பெற வேண்டும் என்று அவர்களிடம் கூறினார்.
ஆனால், சிவக்குமார் நின்று கொண்டே பேசினார். அதை கண்டிக்கும் வகையில், 10 நிமிட “உணவு இடைவேளைக்கு” சிவக்குமாரை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச் செல்லும்படி காவலர்களை பணித்தார் அசார்.
“எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நான் விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டுகிறீர்கள். ஆனால் நீங்கள் விதிகளை பின்பற்றவில்லை.”
“கேள்வி நேரத்தில், நீங்கள் விளக்கத்தை மட்டுமே கேட்க முடியும் – நீங்கள் விவாதிக்க முடியாது. உங்கள் கேள்விகளைக் கேட்க விரும்பினால், நீங்கள் குறுக்கிட அனுமதி கேட்க வேண்டும், ”என்று அசார் அவர்களுக்கு நினைவூட்டினார்.
மித்ரா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து உங்களால் எம்ஏசிசிக்கு பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது என்று குலசேகரன் ஹலிமாவிடம் கூறினார்.
அசார் அவர்கள் ஹலீமாக்கு உதவுகிறார் என்றும், சபாநாயகர் “கேள்வி நேரத்தில்” உறுப்பினர்களை விவாதத்திற்கு அனுமதிப்பதில் “அதிக நெகிழ்வுத்தன்மையுடன்” இருந்தார் என்றும் குலசேகரன் கூறினார்.
தனது ஈப்போ பாரட் தொகுதியில் நாட்டிலேயே அதிக சதவீத இந்திய வாக்காளர்கள் இருப்பதாகவும்,தனது கேள்விகளுக்கு ஹலீமா பயனற்ற வகையில் பதிலளிப்பதாகவும் குலசேகரன் குற்றம் சாட்டினார்.
பின்னர் ஹலிமா குலசேகரனிடம் : “நீங்கள் ஏன் சென்று தோசை சாப்பிட கூடாது? பசியில் என் பதில்கள் உங்களுக்குப் புரியவில்லை போலிருக்கிறது,” என்று கூறினார்.
அதோடு சபாநாயகர், அவையை மதிய உணவுக்காக ஒத்திவைத்தார்.
கடந்த அக்டோபரில், மித்ரா நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 10 நிறுவனங்கள் மற்றும் என்ஜிஓக்களை சேர்ந்த 18 பேரை எம்ஏசிசி கைது செய்ததாக தகவல் வெளியானது. கடந்த மாதம், ஏழு மாநிலங்களில் மேலும் 22 பேரையும் அது கைது செய்தது.
மித்ரா 2019 முதல் 2021 வரை 337 நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு RM203 மில்லியனை மானியமாக அளித்துள்ளது.
-freemalaysiatoday