அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன் இந்த ஆண்டு பொதுத் தேர்தலை (GE15) கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
“தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சரியான நேரத்தில் தேர்தலை நடத்த திட்டமிடுவதாகும். அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை சமீபத்திய தேர்தல்கள் காட்டுகின்றன” என்று அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அவர் தனது உரையில் கூறினார்.
மலாக்கா, சரவாக் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் எதிர்க்கட்சிகள் பல இடங்களை இழந்துள்ளதைக் குறிப்பிட்ட முகமட், எதிர்க்கட்சிகள் “மிகவும் பலவீனமாகவும்”, பிளவுபட்டுள்ளதாகவும், இருப்பதால் இந்த நேரம் சரியாக இருந்தது என குறிப்பிட்டார்.
“பெரிக்கத்தான் நேஷனல் சமீபத்திய தேர்தல்களில் பாஸ் கட்சியை நம்பியுள்ளது,”ஆதலால் நமக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்காது என்று கூறினார்.”ஜோகூரில்,நாம் பெரிக்கத்தான் நேஷனலை அடக்கினோம், அவர்கள் மூன்று இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.”
பொதுவாக தோக் மாட் என்று அழைக்கப்படும் முகமட், அம்னோ கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
“உங்கள் எதிரி பலவீனமாக இருக்கும்போது தாக்குங்கள், ‘அலை மோதும்போதே தலை முழுகுங்கள் ” என்று அவர் கூறினார்.
GE15யை தாமதப்படுத்துவது எதிர்கட்சிகள் மீண்டும் வருவதற்கு இடமளிக்கும் என்றார்.
ஒரு தொற்றுநோய்களின் போது கூட தேர்தல்கள் நடத்தப்படலாம் என்பதை அனுபவம் காட்டியுள்ளதால், GE15யை தாமதப்படுத்த எந்த காரணமும் இல்லை என்று முகமட் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் பதட்டமான அமெரிக்க-சீனா உறவுகள் போன்ற வெளிப்புற காரணிகளால் வானளாவிய விலைவாசிகள் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் எச்சரித்துள்ளார்.
இது அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் மீது கோபத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறினார்.
“இதையெல்லாம் பக்காத்தான் ஹராப்பான் வெடிமருந்துகளாகப் பயன்படுத்தி அரசாங்கத்தைத் தாக்க முற்படும்,அதனால் அம்னோவும் பாதிக்கப்படும்.”
அதனால்தான் GE15யை தாமதப்படுத்துவது “மிகவும் ஆபத்தானது” என்றார்.
அம்னோ ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, “ஜனநாயகத்தின் பாதுகாவலர்” என்றும், மக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முகமட் கூறினார்.
“மலேசியாவில் வாக்குப்பெட்டி மூலம் உருவாக்கப்படாத ஒரு அரசாங்கம் ஒருபோதும் ஆட்சி செய்ததில்லை. நாட்டின் நிலைத்தன்மையை நிர்வகிப்பதற்கு நாம் எவ்வளவு காலம் நம்பிக்கை ,விநியோக ஒப்பந்தங்கள் (CSA) மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) ஆகியவற்றை நம்பியிருப்போம்?
எனவே, GE15யை கூடிய விரைவில் நடத்த வேண்டும், அடுத்த ஆண்டு அல்ல என்ற நிலைப்பாட்டை அம்னோ எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
-freemalaysiatoday