இரண்டு நீர்த்தேக்கக் குளங்கள் மட்டுமே வளர்ச்சித் திட்டங்களாக மாற்றப்பட்டன

தலைநகரைச் சுற்றியுள்ள ஆறு வெள்ள நீர்த்தேக்கக் குளங்களில் இரண்டை மட்டுமே வளர்ச்சித் திட்டங்களுக்கான நிலையை மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றம் இன்று தெரிவித்தது.

Deputy Federal Territories Minister டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ்(Jalaluddin Alias), சம்பந்தப்பட்ட இரண்டு வெள்ள நீர்த்தேக்கங்கள் தாமன் வஹ்யு குளம்(Taman Wahyu) மற்றும் கெபோங்கில் உள்ள டெலிமா குளம்(Delima) ஆகும், அவை ஒவ்வொன்றும் ஜனவரி 18, 2018 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டன.

”மீதமுள்ள நான்கு குளங்களுக்கு (Batu, Nanyang, Batu 4 ½ மற்றும் Taman Desa). எந்த ஒப்புதலும் வழங்கப்படவில்லை. நன்யாங் குளம் சுங்கை ஜின்ஜாங் வெள்ளத் தணிப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் ஹன்னா யோவின் (Pakatan Harapan-Segambut) கேள்விக்கு பதிலளித்தார்.

2019 ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, வளர்ச்சி நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட கோலாலம்பூரில் உள்ள 6 குளங்களின் வளர்ச்சித் திட்டங்களின் சமீபத்திய நிலை மற்றும் விவரங்களை அறிய யோவ் விரும்பினார்.

இங்குள்ள ஆறு வெள்ளத் தேக்கக் குளங்களின் நிலை வளர்ச்சி நோக்கங்களுக்காக மாற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து MACC விசாரணை அறிக்கையைத் திறந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) இரண்டு குளங்களுக்குள் (வஹ்யு மற்றும் டெலிமா) நுழையாமல் டெவலப்பர் மேற்கொண்ட வளர்ச்சி அதன் உரிமையின் எல்லைக்குள் மட்டுமே உள்ளதா என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்த ஒரு உரிமம் பெற்ற சர்வேயர் ஆலோசகரை நியமித்துள்ளதாக ஜலாலுதீன் கூறினார்.

“ஜனவரி 13 அன்று ஆலோசகரால் அளவீட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு, ஜனவரி 31 ஆம் தேதி MACC அறிக்கை அனுப்பப்பட்டது. இப்போது MACCயின் முழுமையான அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இரண்டு குளங்களைச் சுற்றியுள்ள மேம்பாடு, குளங்களில் ஒதுக்கப்படும் நீரின் செயல்பாட்டுத் திறன் மற்றும் அளவை பாதிக்காது என்றார்.