அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே உள்ள கட்டிடங்களும் நல்ல காற்றோட்டம் மற்றும் உட்புற காற்றின் தரத்தை பராமரிக்க வேண்டும், இது தற்போதைய தொழில்துறை தரத்திற்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்று துணை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப்(Arthur Joseph Kurup) கூறினார்.
உட்புறச் சூழலில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் எளிதில் பரவாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காகவும், கோவிட்-19க்குப் பிந்தைய காலகட்டத்தில் உடல்நலக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் சிறந்த காற்றின் தரத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
“எனவே, கட்டுமானத் துறையில் உள்ள தொழிளார்கள் வணிகம் செய்வதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பது இன்றியமையாதது,” என்று மலேசிய பொறியியல் கண்காட்சி மற்றும் மாநாடு மற்றும் முதல் ஏர் கண்டிஷனிங், குளிர்பதன மற்றும் காற்றோட்டம் கண்காட்சியைத் தொடங்கும் போது கோலாழும்பூரில் கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோய் அனைத்துத் தரப்பினரையும் புதிய இயல்பிற்கு இணங்க புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற நிர்ப்பந்தித்துள்ளதாக ஆர்தர் கூறினார்.
தங்கள் அலுவலக காற்றோட்ட அமைப்பை மேம்படுத்தும் நிறுவனங்கள் தங்கள் வளாகத்தைப் புதுப்பித்தல் மற்றும் புதுப்பிக்கும் செலவை ஈடுகட்ட RM300,000 வரை வரி விலக்குக்குத் தகுதிபெறும் என்றும் அவர் கூறினார்.
“புதிய இயல்பான நிலையில் காற்றோட்டம் மற்றும் இருக்கை திறன் குறித்த தேவைகளுக்கு அலுவலகங்கள் இணங்குவதை உறுதி செய்யவதாகும்,’’ என்று கூறினார்.

























