மே 1 முதல் அமல்படுத்தப்படும் குறைந்தபட்ச ஊதிய உயர்வால் வணிகங்கள் எவ்வாறு பயனடைகின்றன என்பதை விளக்குமாறு மைடின் ஹைப்பர் மார்க்கெட் தொடரின் தலைவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மைடினின் நிர்வாக இயக்குனர் அமீர் அலி மைடின், ஒரு மாதத்திற்கு ரிம1,200 லிருந்து ரிம1,500 ஆக அதிகரிப்பதற்கு கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் கசிவு விளைவுகள் பற்றிய சரியான பகுப்பாய்வு எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
“மக்கள் வாழ்வதற்குப் போராடுகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்; மக்கள் வாழ முடியாவிட்டால், மக்களை நம்பியிருக்கும் தொழில்களும் வாழ முடியாது. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. விளக்கம் இருந்திருந்தால், வணிகங்கள் அதை ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கும், ”என்று அவர் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
மைடினின் ஊதியக் கட்டணம் ஆண்டுக்கு 25 மில்லியன் வெள்ளியாக உயரும் என்று கூறிய அவர், ஊதிய உயர்வு வணிகங்களுக்கான செலவுகளை அதிகரிக்கும், அதனால் பொருட்களின் விலையை அதிகரிக்க இவை வழிவகுக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்கிறதா என்று கேட்டார்.
இருப்பினும், தொழிலாளர் பற்றாக்குறை குறித்து வணிகங்கள் அதிக கவலையில் உள்ளன, என்றார் அவர். வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கான விண்ணப்பங்களை விரைவாக அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசிய உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு தலைவர் சோ தியன் லாய், விண்ணப்ப செயல்முறையில் பல நிலைகள் உள்ளன என்று தெரிவித்தார்.
“தொழில்துறையை விரைவாக தொழிலாளர்களைக் கொண்டு வர அனுமதிக்க, முடிந்தவரை இந்த நிலைகள் குறைக்கப்படலாம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று சோ கூறியுள்ளார்.
தடுப்பது அநியாயம்
இது பற்றி கருத்துரைத்த ஒரு சமூக அமைப்பின் தலைவர், விலைவசி ஏற்றதிற்கு காரணம் அடிப்படை யில் சம்பளத்தை ரிம 300 ரிங்கிட் ஏற்றுவதால் அல்ல, இது மிகவும் சொற்பமான உயர்வு, முதலாளிகள் தங்களின் இலாபத்தை இழக்க விரும்பவில்லை என்பதாகும்.
அரசாங்கம் தனது ஊதாரித்தன செலவீனங்களை 10% குறைத்து, அதன் வழி பாதிக்கப்படும் நிருவனங்களுக்கு வரி விலக்கு வழங்கலாம் என்றார். ரிம 1,500- ஐ வைத்து ஒரு ஏழை வயிற்றை கழிவுவதே கடினம், அதையும் தடுப்பது அநியாயம் என்றார்.