சட்டப் பட்டதாரியின் எதிர்கால கனவு CLP ஆல் துண்டிக்கப்பட்டது

ஒரு பட்டதாரி தனது கல்வி  கடன் சுமை மற்றும், தனது தந்தையின் சேமிப்புடன் சட்டம் படிக்கச் செலவிட்டு, நீதிமன்றத்தில் வாதாமிட  அழைக்கப்படுவதற்கு முன்பே, கல்வி  கனவு இருண்டு விட்டதாக கூறுகிறார்.

ஜெயா என்று அழைக்கப்படும் 33 வயதான அவர், இது சட்டப்பூர்வ நடைமுறையில் (CLP) சான்றிதழைப் பெற எடுக்கும் முயற்சிகளின் வரம்புதான்  காரணமாகும் என்று கூறினார்.

சட்டப் பயிற்சி தகுதி வாரியம் (LPQB) ஒரு நபர், வழக்கறிஞசராக மாறுவதற்கான தகுதிகளை தீர்மானிக்கிறது மற்றும் பெரும்பாலான வெளிநாட்டு பட்டம் பெற்றவர்களுக்கு CLP ஒரு முன்நிபந்தனையாகும் என்று ஜெயா கூறினார்.

மலேசிய அடிப்படை மற்றும் நடைமுறைச் சட்டங்களை உள்ளடக்கிய ஐந்து பாடங்களை உள்ளடக்கிய எழுத்துத் தேர்வுகளை இந்த வாரியம் நடத்துகிறது என்றார்

யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு இந்த தேர்வு விதிக்கப்பட்டுள்ளது, மேலும் நான் உள்ளூர் தனியார் கல்லூரியில் வழி டுவினிங்  செய்தேன். அதாவது பாதி இங்கே, மீதம் அயல்நாட்டில்.

“என் பெற்றோர் ரிம. 150,000 செலவழித்ததால், வேல்ஸில்(Wales) உள்ள அபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தில் (Aberystwyth University) இறுதி ஆண்டை என்னால் முடிக்க முடிந்தது, மேலும் நான் வீட்டிற்குத் திரும்பி, எனது CLPயை முடித்து, சேம்பரிங் தொடங்க உற்சாகமாக இருந்தேன்”.

“2017 ஆம் ஆண்டில், சி.எல்.பி.( CLP) யில் தேர்ச்சி பெறுவதற்கான நான்கு முயற்சிகளின் உச்சவரம்பை அவர்கள் அறிமுகப்படுத்திய போது, மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அல்லது ஒருபோதும் சட்டத்தைப் பின்பற்ற முடியாது என்பது கூடுதல் மன அழுத்தமாக மாறியது,” என்று அவர் விளக்கினார்.

ஒரே ஒரு தாளில் தோல்வியுற்றவர்களுக்கு மூன்று முயற்சிகள் என்ற கூடுதல் நியாயமற்ற வரம்பு இருந்தது, கடந்த ஆண்டு தனது வாழ்க்கைப் பாதை எவ்வாறு இடியுடன் நின்று தனது பெற்றோரின் நம்பிக்கையைத் தகர்த்தது என்பதை நினைவில் வைத்து ஜெயா கூறினார்.

அவரின் 73 வயதான அவரது தந்தை, சந்திரன் சோர்வாகப் பேசுகிறார், தனது மகனின் கனவுகள் அநியாயமாக வீணாகிவிட்டதை விவரித்தார்.

அவரது சிறுவயது கனவாக இருந்தது, நான் இளமையாக இருந்தபோது வழக்கறிஞராக வேண்டும் என்ற எனது கனவையும் பிரதிபலித்தது.

ஆனால் என்னால் சட்டக் கல்லூரிக்குச் செல்ல முடியாததால், என் மகனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்க விரும்பினேன்.

“எனக்குத் தெரிந்தபடி, டாக்டர்கள், பொறியாளர்கள் அல்லது கணக்காளர்கள் போன்ற பிற தொழில் வாழ்க்கையைத் தொடரும் மாணவர்கள் இதுபோன்ற நியாயமற்ற வரம்புகளுடன் திணிக்கப்படவில்லை,” என்று சந்திரன் கூறினார், தனது மகனின் வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்தபோது அவர் மனச்சோர்வடைந்தாக கூறினார்.

LPQB அலுவலகத்தின் ஒரு பிரதிநிதி, ஒரே தாளில் தங்கள் மூன்று முயற்சிகளும் தோல்வி அடைந்த மாணவர்களிடமிருந்து பல முறையீடுகளைப் பெற்றதாக உறுதிப்படுத்தினார். இருப்பினும், வாரியத்தின் முடிவு மாறாமல் உள்ளது.

இதன் பொருள் CLP தேர்வில் மீண்டும் எழுத அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படாது.

எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்

ஒரே ஒரு தாளில் மட்டும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று  முயற்சிகளை மட்டும் திணிப்பதன் மூலம் மேலும் ஓரங்கட்டப்பட்டனர் என்பதை விளக்கிய ஜெயா, நூற்றுக்கணக்கான CLP மாணவர்களும் இதேபோன்ற இக்கட்டான நிலையில் இருப்பதாக மதிப்பிட்டார்.

“ஒன்றுக்கு மேற்பட்ட தாள்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு (நான்கு) உள்ளது”.

“அவர்களுக்கு நான்கு முயற்சிகள் அனுமதிக்கப்படுகின்றன, ஒரு தாளில் தோல்வியுற்றவர்கள் மூன்று முயற்சிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்றார்.

சஃபியா(Safiya) என்று அழைக்கப்படும் சக சி.எல்.பி (CLP) மாணவி, ஏப்ரல் 2021 இல் இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையின் போது (MCO) இருந்ததைப் போலவே நிறைய மன அழுத்தத்தின் கீழ் தனது கடைசி முயற்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறினார்.

” MCO வுக்குப் பிறகு எனது தேர்வை ஒத்திவைக்க முடியுமா என்று நான் LPQB யிடம் கேட்டேன், ஆனால் நான் தேர்வில் கலந்து கொள்ளாவிட்டால் எனது கடைசி முயற்சியை நான் இழக்க நேரிடும்”, என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

“நான் தோல்வியுற்ற ஒரு தேர்வை மறுபரிசீலனை செய்ய எனக்கும் மற்றொரு வாய்ப்பு வேண்டும்,” என்று இப்போது மனித வளங்கள் மற்றும் கணக்கியலில் பணிபுரியும் 33 வயதான அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், NGOக்கள் மற்றும் ஆர்வலர்கள் குழு CLP மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட நான்கு முயற்சி வரம்புகளை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.

அவர்களில் என்லைட் மலேசியா(Enlight Malaysia), லிகா ரக்யாட் டெமோக்ராடிக்(Liga Rakyat Demokratik), பெர்துபுஹான் எஸ்டடோஸ் ரக்யாட் மலேசியா(Pertubuhan Serikat Rakyat Malaysia), வழக்கறிஞர் அஷீக் அலி சேத்தி அலிவி(Asheeq Ali Sethi Alivi), கெராக்கான் குவாமன் ராக்யாட்டின் மிச்செல் லிங் ஷியான் மிஹ்(Michelle Ling Shyan Mih of Gerakan Guaman Rakyat) மற்றும் சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர் முகமட் ஷாஃபீக் எக்வான் ஷரோம்(Mohd Shahffeq Eqhwan Shahrom.) ஆகியோர் அடங்குவர்.

வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்களாக தகுதி பெறுவதற்கு பட்டதாரிகளுக்கு முதுகலை படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்று குழு அழைப்பு விடுத்தது.