அயல் நாட்டு தொழிலாளர்களின், தொடரும் அவல நிலை

எலிகளும் கரப்பான் பூச்சிகளும் நாலாபுறமும் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது.நாற்றமும் குமட்டலுமாக இருந்தது.

மடக்கிய அட்டைப் பெட்டிகள் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, அதே சமயம் ஆங்காங்கெ  கயிறுகளில் துணிகள் தொங்கிக்கொண்டு இருந்தன.

மூன்று மாடி கடையின் இரண்டு தளங்களில் அமைந்துள்ள ஒரு தங்கும் இடத்தை சோதனையிட்டனர்.அடிமைத்  தொழிலாளர் மற்றும் மனித கடத்தல் தொடர்பான சமீபத்திய நடவடிக்கையின் போது, தொழிலாளர் சிறப்புத்துறை (JTKSM) அமலாக்க அதிகாரிகளைச் சந்தித்த காட்சி இதுவாகும்.

சில்லறை விற்பனையாளரால் பணியமர்த்தப்பட்ட சுமார் 40 வெளிநாட்டவர்கள் சேரஸின் பண்டார் துன் ரசாக் என்ற இடத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் தங்கியிருந்தனர்.

அவர்களது மோசமான வாழ்க்கை நிலைமைகளைத் தவிர, தொழிலாளர்கள் தங்கள் இடத்தை சில்லறை விற்பனையாளரின் பொருட்களுடன் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டதோடு மடக்கப்பட்ட  அட்டைப் பெட்டிகளில் தூங்குகிறார்கள்.

காற்றோட்டம் குறைவாகவும் , குழாய்கள் கசிந்த நிலையிலும், தரையில் தண்ணீர் குட்டைகளும் – காட்சிகளாக இருந்தன.

பணியின் போது நேர்காணல் செய்யப்பட்ட முதலாளியின் பிரதிநிதி, நிறுவனம் தங்குமிடத்தை வழங்குவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றியதாகக் கூறினார், ஆனால் “வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வசதிகளை கண்காணிக்க நேரம் இல்லை”, எனவும் தொழிலாளர்கள் ஏதேனும் சிக்கல்களை சந்தித்தால் அதை எதிர்கொள்ள அவர்களிடமே விட்டுவிட்டதாகக் கூறினார்.

ஐந்து மணி நேர நடவடிக்கையைத் தொடர்ந்து, ஊழியர்களின் குறைந்தபட்சத் தரநிலைகள் வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் வசதிகள் சட்டம் 1990 (சட்டம் 446) மற்றும் வேலைவாய்ப்புச் சட்டம் 1955 ஆகியவற்றின் கீழ் பல்வேறு விதிகளை முதலாளி மீறியது கண்டறியப்பட்டது.

தொழிலாளர் நலன்

கடந்த காலங்களில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகள் நாடு முழுவதும் முதலாளிகளால் செய்யப்பட்ட பல்வேறு குற்றங்களை வெளிக்கொணர்ந்தன.

JTKSM படி, சட்டம் 446 ன் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்காக பிப்ரவரி 2021 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 1,285 விசாரணை ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில், 135 வழக்குகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு மொத்தம் ரிம1 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 908 வழக்குகளுக்கு மொத்தம் ரிம10.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது, மீதமுள்ளவை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றன.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், பல முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் நலனை, குறிப்பாக அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படை தேவைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

ஜேடிகேஎஸ்எம் துணை இயக்குநர் அஸ்ரி அப்த் வஹாப், கட்டாயத் தொழிலாளர் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கும், நாட்டின் தொழிலாளர் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் தனது துறையின் முயற்சிகளில், இந்த நிலைமை “மிகவும் கவலையளிக்கிறது” என்று அவர் கூறினார்.

“ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, ​​சட்டம் 446 க்கு இணங்கத் தவறுவது  முதலாளிகளால் செய்யப்படும் முக்கிய குற்றங்களில் ஒன்றாகும், அவர்களில் பெரும்பாலோர் அதிக பணியாளர்களைக் கொண்டுள்ளனர் மற்றும் வசதியான தங்குமிடங்களை வழங்கத் தவறிவிடுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

ஜூன் 1, 2020 முதல் அமல்படுத்தப்பட்ட சட்டம் 446-ன் திருத்தங்களின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை, மலேசியாவில் உள்ள 37,662 முதலாளிகளில் 50விழுக்காடு பேர் இன்னும் JTKSM இடமிருந்து தங்குமிடச் சான்றிதழைப் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் 446 ஐ மேம்படுத்தவும்

சட்டம் 446 ன் பிரிவு 24D ன் கீழ், JTKSM இலிருந்து தங்குமிட சான்றிதழைப் பெறத் தவறியதற்காக முதலாளி அல்லது மையப்படுத்தப்பட்ட தங்குமிட வழங்குபவர் மீது வழக்குத் தொடரலாம்.

அஸ்ரியை பொறுத்தவரை, சட்டம் 446-ன்படி குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தரநிலைகளை பூர்த்தி செய்யும் தங்குமிடத்தை முதலாளி அல்லது மையப்படுத்தப்பட்ட தங்குமிட வழங்குபவர் வழங்கினால் மட்டுமே  JTKSM ஆல் சான்றிதழ் வழங்கப்படும்.

குளியலறை, கழிப்பறை, படுக்கை மற்றும் மெத்தை போன்ற பயன்பாடு வசதிகள் மற்றும் சமைப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும், சாப்பிடுவதற்கும் இடவசதியும் இதில் அடங்கும்.

“அதைச் செய்யத் தவறிய ஒரு முதலாளிக்கு ரிம50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அதே நேரத்தில் மையப்படுத்தப்பட்ட தங்குமிட வழங்குநர் ரிம50,000 வரை அபராதம் மற்றும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் ஆகியவற்றை அவர்கள்  எதிர்கொள்கிறார்,” என்று அவர் கூறினார்.

சட்டத்தை மேலும் மேம்படுத்தவும், சமீபத்தில் காலாவதியான 2021 அவசரச் சட்டம் 2021 ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை இணைத்துக்கொள்ளவும் தனது துறை இப்போது சட்டம் 446ஐ திருத்துவதற்கு மத்தியில் உள்ளது என்றும் அஸ்ரி கூறினார்.

தொழிலாளர்களுக்குத் தகுதியற்ற மற்றும் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் தங்குமிடங்கள் அல்லது வீடுகளை மாற்ற, புதுப்பிக்க, பழுதுபார்க்க முதலாளிகளுக்கு உத்தரவிட JTKSM இயக்குநர் உயர் அதிகாரிக்கு இந்தத் திருத்தம் அதிகாரங்களை வழங்கும் என்று அவர் கூறினார்.

11 குறிகாட்டிகள்

மார்ச் 21 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நெறிமுறை 29 ஐ அங்கீகரிக்க மலேசியாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அதன் வெளிநாட்டு ஊழியர்களின் நலனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக இருப்பதாக அஸ்ரி கூறினார்.

நெறிமுறை 29 என்பது 1957 ல் மலாயாவால் அங்கீகரிக்கப்பட்ட கட்டாயத் தொழிலாளர் மாநாட்டின் கூடுதல் நெறிமுறையாகும்.

நெறிமுறை 29ஐ அங்கீகரித்த உலகின் 58வது நாடாக மலேசியா உள்ளது, இது மனித கடத்தல் உட்பட அனைத்து வகைகளிலும் கட்டாய உழைப்பை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை குறிக்கிறது.

ILO, கட்டாய உழைப்பின் 11 குறிகாட்டிகளை கோடிட்டுக் காட்டி, அதில் பாஸ்போர்ட் மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் போன்ற அடையாள ஆவணங்களை தொழிலாளர்களின் அனுமதியின்றி வைத்திருப்பது மற்றும் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவது ஆகியவை அடங்கும்.

“அதிக கல்வி இல்லாதவர்கள் மற்றும் ஏழைகள்,செல்ல இடமில்லாதவர்கள் போன்ற தொழிலாளர்களின் பாதிப்புகளின் அடிப்படையில் அவர்களை துஷ்பிரயோகம் செய்யும் முதலாளிகளும் உள்ளனர்.”

“பல முதலாளிகள் தங்கள் தொழிலாளர்கள் நேரம் பார்க்காமல்  வேலை வாங்குகிறார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் வரை அவர்கள்  வேலை செய்ய வேண்டும்.மேலும்  முதலாளிகள், தொழிலாளர்கள் செய்த வேலைக்கு ஊதியம் வழங்கவில்லை. ,” என்று அவர் குறிப்பிட்டார்.

கண்காணிப்பு

இதற்கிடையில், Universiti Kebangsaan Malaysia Faculty of Social Science and Humanities lecturer Shazwan Mokhtar கூறும்போது, ​​முதலாளிகள் தங்களுடைய பணியாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கு, சட்டம் 446க்கு மற்ற வழிமுறைகளின்  ஆதரவு தேவை என்றார்.

அதிகாரிகளின் வழக்கமான செயல்பாடுகள் அல்லது கண்காணிப்புகள் இன்னும் தேவை என்று  கோரினர்.

அதிகாரிகளுக்கு, குறிப்பாக ஜே.டி.கே.எஸ்.எம்.க்கு புகார்  அனுப்புவதை எளிதாக்க, புகார் தளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் ஷாஸ்வான் கூறினார். புகார்கள் செயலி போன்ற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவது அல்லது தொழில்துறை பகுதிகளில் ஒரு நிறுத்த மையங்கள் அல்லது கியோஸ்க்களை அமைப்பது, தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் புகார் அளிக்க அனுமதிக்கும் என்றார் அவர்.

“கட்டாய உழைப்பு பிரச்சனை பொதுவாக ‘அசுத்தம் , கடினமான மற்றும் ஆபத்தான’ (3D) வேலை துறையில் ஏற்படுகிறது. துஷ்பிரயோகத்திற்கு ஆளான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முறையான இடமோ அல்லது வழியோ இல்லாமல் புகார் செய்வது துரதிர்ஷ்டவசமானது.”

“அமலாக்கத்தைப் பொறுத்தவரை, அவர்களின் அமலாக்கத் திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மலேசியாவில் நாடு முழுவதும் சுமார் 400 தொழிலாளர் ஆய்வாளர்கள் (Labour Inspectors)மட்டுமே உள்ளனர், அனைத்து நிறுவனங்களையும் கண்காணிக்கவும், கட்டாய உழைப்பு மற்றும் பிற வகையான துஷ்பிரயோகங்களை அவற்றின் வளாகங்களை ஆய்வு செய்ய போதுமான எண்ணிக்கை இல்லை என்று இதற்குமுன் தெரிவிக்கப்பட்டதுள்ளது.

பிழைப்புக்காக வந்திருக்கும் தொழிலாலர்களின் பிரச்சனை, இக்கட்டானது, இதில் மனித உரிமை பாதிக்கப்படுகிறது, அதேவேளையில் அவர்கள் நாட்டில் படும் சிரமம் இதைவிட மோசம் என்ற ஆறுதலும் உள்ளது. இருப்பினும் மலேசியா தொழிலாலர்களின் நலனில் மனித நேயத்துடன் செயலாற்ற வேண்டும். அவர்களின் நலன் சட்ட முறைப்படி காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

-freemalaysiatoday