செப்டம்பருக்குள் அவசரகால பருவ நிலை பிரகடணம் தேவை – பொது இயக்கங்கள்

மலேசியா தினத்தை முன்னிட்டு (செப்டம்பர் 16) நாட்டில் அவசர கால பருவநிலை பிரகடணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாறு மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு, சுற்றுச்சூழல் உரிமைக் குழுக்களின் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

இது சார்ந்த ஒன்றிணைந்த அவசரகால மலேசியா பருவநிலை  இயக்கங்கள்(GABUNGAN DARURAT IKLIM MALAYSIA-GDIMY) என்று பெயரிடப்பட்ட கூட்டணி, மார்ச் 4 தேதியிட்ட அக்கடிதத்தை வெளியிட்டது, இக் கடிதம் அடுத்த வாரம் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும், இதில்  12 கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளது.

இது புவி வெப்பமடைதலை 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்துவது மற்றும் காலநிலையை சமாளிக்கும்  தன்மையை உருவாக்குவது

அவர்களின் கோரிக்கைகளில் அவசர காலநிலைகளை சுகாதார அவசரநிலைகளாக அங்கீகரிப்பது மற்றும் மலேசியா முழுவதும் குறைந்த கார்பன் மற்றும் நிலையான சுகாதார அமைப்புகளை செயல்படுத்துவது ஆகியவை அடங்கும்.

இன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், மலேசியாவின் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்கும் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஷரிபா சப்ரினா சையத் அகில்(Shariffa Sabrina Syed Akil), குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோரிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றார்.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள், காலநிலை அவசரநிலையை உடனடியாக அறிவிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் நோக்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் நமது வாழ்க்கை, நமது அன்புக்குரியவர்களும் வருங்கால சந்ததியினர் அதை நம்பியிருக்கிறார்கள்.

“நமது அரசாங்கம், சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை, அதை எப்போதும் பட்டியலில் கடைசியாக வைத்திருக்கிறது. அவர்கள் ஒரு நல்ல சூழலின் முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை,”என்று அவர் கூறினார், அரசியல் விருப்பம் மற்றும் நேர்மையின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டினார்.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பேராசை காரணமாக சுற்றுச்சூழலின் எதிர்காலத்தைப் பற்றி அரசாங்கங்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.

“நாம் அனைவரும் அறிந்தது, நமது   மாநிலங்கள் தங்களின்  வருமானத்தை  ஈட்டுவதற்கு திறமைகளை பயன்படுதுவதிலை, மாறாக கட்டு மரம் மற்றும் இயற்கை வளங்களை  சுரண்டும் வழிமுறைகளை கையாள்கின்றனர்”, என்றார்.

ஷரிபா சப்ரினா சையத் அகில்

“இது அதிகார துஷ்பிரயோகம், குரோனிசம், லஞ்சம், பேராசை ஆகியவற்றால் மேலும் தூண்டப்படுகிறதும், எதிர்காலத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் தங்களை வளப்படுத்திக்கொள்ளும் போது  இயற்கையின் சீற்றத்தின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடுகிறது. ” என்று அவர் கூறினார்.

முதலில் பாதிக்கப்படுவது

பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு வரும்போது, ​​முதலில் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க சமூகங்கள்தான் என்று சப்ரினா மேலும் கூறினார்.

பிரதமருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், உணவு மற்றும் நீர் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலையான முறைகள் உட்பட பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் குழு (GDIMY) கோரியுள்ளது.

மலேசியாவின் பல்லுயிரியலைப் பாதுகாக்கவும்

குறைந்தபட்சம் 55% நிலப்பரப்பை நில காப்பு காடுகளாகவும், 30% நில காடுகளை முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும், 30% கடல் நீரை கடல் பூங்காக்களாகவும் அறிவிப்பதன் மூலம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க இயலும் என அக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள், மரபுகள், நிலைத்தன்மை மற்றும் அவர்களின் நடைமுறைகளுக்கு ஏற்ப பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சொந்தமாகவும் நிர்வகிக்கவும் உள்ளூர் சமூகங்களின் உரிமை உள்ள பூர்வகுடிகளை நிலைநிறுத்துவதும் அவசியம் என்று  அவர் மேலும் கூறினார்.

GDIMY, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிப்பதில் முன்னோக்கிச் செல்ல அரசாங்கத்துடன் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

GDIMY -யில் பெக்கா (Peka), பார்ட்டி சோசியாலிஸ் மலேசியா (Parti Sosialis Malaysia), கிளிமா ஆக்ஷன் மலேசியா (Klima Action Malaysia), கிரீன்பீஸ் மலேசியா (Greenpeace Malaysia) மற்றும் சஹாபத் அலாம்  மலேசியா (Sahabat Alam Malaysia) உள்ளிட்ட அரசு சாரா நிறுவனங்களைக் கொண்டுள்ளது.