இரண்டாவது பூஸ்டர் டோஸ் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய  வழிமுறைகள்

மூத்த குடிமக்கள், துணை நோய் உள்ளவர்கள், பயணிகள் மற்றும் மிதமான அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள இளம் வயதினருக்கான இரண்டாவது பூஸ்டர் டோஸ் குறித்த வழிமுறையை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள்

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் துணை நோய் உள்ள அனைவருக்கும்  Pfizer (Comirnaty)  இரண்டாவது பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.

“மூத்த குடிமக்கள் குறைந்தபட்சம் நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு முன்பே முதல் பூஸ்டர் டோஸைப் பெற்றிருக்க வேண்டும். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதல் பூஸ்டர் ஷாட்டை முடித்தவர்கள், முழுமையாக குணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அதைப் பெறலாம், ”என்று அவர் கூறினார்.

மூத்த குடிமக்கள் MySejahtera செயலியின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள  தடுப்பூசி மையங்களில் (PPVs) முன்பதிவு செய்தவுடன் ‘புக்கிங் இணைப்பு’ வழங்கப்படும், என்று கைரி கூறினார்.

PPV என பட்டியலிடப்பட்டுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள், அந்தந்த மருத்துவமனைகளில் இருந்து நான்காவது டோஸுக்கு விண்ணப்பிக்கலாம்.

PPV என பட்டியலிடப்படாத மருத்துவமனைகளுக்கு, மருத்துவப் பணியாளர்கள் முன் தடுப்பூசி மதிப்பீட்டை (PVA) முடித்து, தங்கள் நோயாளியை அருகில் உள்ள PPVக்கு அனுப்ப வேண்டும்.

மூத்த குடிமக்கள் எந்தவொரு PPV க்கும் செல்லலாம், தேவைப்பட்டால், மருத்துவ அதிகாரி முன் தடுப்பூசி மதிப்பீட்டை PVA ஐ மேற்கொள்வார் என்று கைரி கூறினார்.

அமைச்சகத்தின் அவுட்ரீச் திட்டத்தின் கீழ் நான்காவது டோஸ்களுக்காக  முதியோர் பராமரிப்பு இல்லங்கள் அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு (PKD) விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.

 

அதிக ஆபத்தில் உள்ள இளம் வயதினர்

12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினர், மிதமான அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு கொண்டவர்கள் என்று மருத்துவ சான்றளிக்கப்பட்டவர்கள், தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் முடிந்த 28 நாட்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளலாம் என்று கைரி கூறினார்.

“கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த 13 முதல் 19 வயதுக்குட்பட்ட நபர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸுக்கு தகுதியுடையவர்கள்,” என்று அவர் கூறினார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குழந்தைகளுக்கான தனியார் சிறப்பு மருத்துவ மனைகள், சிறப்பு மருத்துவ மனைகள் ஆகியவற்றில் சிகிச்சை பெறும் இளம் பருவத்தினருக்கு அந்தந்த சுகாதார நிலையத்தில் பூஸ்டர் ஷாட் வழங்கப்படும்  என்றார் அவர்.

தகுதியுடைய ஆனால் மூன்றாவது டோஸ் வழங்கப்படாத இளம் பருவத்தினர், PVA-ஐ மேற்கொள்ள ஒரு மருத்துவ நிபுணரைப் பார்க்கலாம் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் சுகாதார வசதிகளுக்குப் பரிந்துரைக்கப்படலாம் என்றார் அவர்.

 

பயணிகள்

வெளிநாடு செல்ல விரும்பும் 18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் போட்ட நாளிலிருந்து குறைந்தது ஒரு மாதமாவது இரண்டாவது பூஸ்டர் ஷாட் கொடுக்கப்படலாம் என்று கைரி கூறினார்.

“விமான டிக்கெட் முன்பதிவுக்கான ஆதாரம் மற்றும் பயணத் திட்டம் போன்ற துணை ஆவணங்களுடன் அவர்கள் எந்த PPV-க்கும் செல்லலாம்,” என்று அவர் கூறினார்.

திங்களன்று, அதிக ஆபத்துள்ள மூத்த குடிமக்கள் இரண்டாவது பூஸ்டர் ஷாட் எடுக்க கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று கைரி கூறினார்.

“இரண்டாவது பூஸ்டர் ஷாட் எடுப்பது மக்களின் முடிவு,சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்க மட்டுமே முடியும் என்று அவர் கூறினார்.

“நான் அவர்களை வற்புறுத்துகிறேன் என்று சொல்லாதீர்கள், குறிப்பாக அவர்கள்  ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டங்களுக்காக பயணம் செய்யும் பொழுது” எங்கள் மூத்த குடிமக்கள் சிறந்த பாதுகாப்பைப் பெறுவதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று ஒரு ஆன்லைன் வீடியோவில் அவர் கூறினார்.

-freemalaysiatoday