நாட்டில் உள்ள ரோஹிங்யா அகதிகளுக்கு, ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) அட்டைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் கூறினார்.
கெடாவில் பண்டார் பாரு அருகே உள்ள சுங்கை பகாப் குடியேற்ற தடுப்புக் கிடங்கில் இருந்து நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா கைதிகள் புதன்கிழமை தப்பிச் சென்றதைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
“அவர்கள் ஆவணங்கள் இல்லாமல் எளிதாக நாட்டிற்குள் நுழைவதற்கும், UNHCR அட்டைகளை உடனடியாகப் பெறுவதற்கும் நாம் இடம் கொடுக்க முடியாது. இது சரியில்லாத ஒன்று… அதனால்தான் நாம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறோம், அட்டை வைத்திருப்பவர் என்பதால் அவர்கள் விரும்பியபடி நம் நாட்டில் நுழைந்து வாழலாம் என்று அர்த்தமல்ல, ”என்று அவர் கூறினார்.
டேவான் அஸ்தகா பட்டு குராவில்(Dewan Astaka Batu Kurau) உள்ள லாருட் ((Larut) நாடாளுமன்றத் தொகுதியில் பின்தங்கிய 1,000 மக்களுக்கு நன்கொடைகளை வழங்கிய பின்னர் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
புதன்கிழமை அதிகாலை 4.30 சம்பவத்தில் , கலவரத்தைத் தொடர்ந்து தடுப்புக் கிடங்கில் இருந்து 528 ரோஹிங்கியா கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
தப்பியோடியபோது, வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தெற்குப் பகுதியில், ஜாவிக்கு(Jawi) அருகே நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு கைதிகள் கொல்லப்பட்டனர்.