அன்வார் இப்ராகிம் பிரதமராகும் முயற்சிக்கு ஆதரவளிக்க இதற்கு முன்னால் மற்ற கட்சிகளின் எம்.பி.க்களை நாடியது கட்சி தாவால் அல்ல என்கிறார் சைஃபுடின் நசுஷன் கூறியுள்ளார். கட்சி மாற வேண்டிய அவசியமின்றி மற்ற நட்பு எம்.பி.க்கள் அன்வாருக்கு ஆதரவை வழங்க முடியும் என்று அந்த கட்சியின் பொது செயலாளர் கூறினார்.
“அரசாங்கம் அமைக்க குறைந்தபட்சம் 112 எம்.பி.க்கள் தேவை என்பதால் எதிர்க்கட்சியான நாங்கள் மற்ற கட்சிகளிடம் ஆதரவை கோரினோம். எவ்வாறாயினும், நாங்கள் அவர்களை கட்சி மாறுமாறு கேட்கவில்லை,” என்று அவர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் பிப்ரவரி 2020ல் அதிகாரத்தை இழந்தது, அதற்குப் பதிலாக புத்ராஜெயாவில் முஹிடின் யாசின் தலைமையிலான பெரிகாத்தான் நேஷனல் பதவி ஏற்றது.
சில மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பரில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அவரிடம் “வலுவான, உறுதியான, வலிமையான மற்றும் பெரும்பான்மை” இருப்பதாக அன்வார் கூறினார். முஹிடின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததாக அவர் அறிவித்தார்.
அன்வார் மற்ற எம்.பி.க்களுடன் பழகுவது கட்சித் தாவலுக்கான ஒப்புதல் அளிப்பதாக இல்லை என்று சைபுடின் கூறினார்.
மற்ற எம் பி-க்களின் ஆதரவைப் பெறுவதற்கான முடிவு கட்சி உறுப்பினர்களிடையே கூட்டாக எட்டப்பட்டதாகவும், அதற்காக அன்வாரைக் குறை கூறக்கூடாது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் அரசாங்கத்துடன் நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது பக்காத்தான் ஹராப்பான் முயன்ற முக்கிய சீர்திருத்தங்களில் கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டமும் ஒன்றாகும்.
ஜனவரியில், பக்காத்தான் ஹராப்பான் இஸ்மாயிலிடம், கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டம் தாக்கல் செய்யப்படாவிட்டால், புரிந்துணர்வு ஒப்பந்தம் “தானாகவே ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான வழிகாட்டல் குழுவின் தலைவராக சைபுடின் உள்ளார்.
ஜூலை மாதம் நடைபெறவுள்ள அடுத்த மக்கள் கூட்டத்தின் அமர்வில் தாக்கல் செய்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட சட்டத்தை நாடாளுமன்றக் குழு இப்போது உருவாக்கி வருகிறது.
இந்த மசோதா மே மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என இம்மாத தொடக்கத்தில் கூட்டணி தெரிவித்திருந்தது.
-freemalaysiatoday