பட்டாசுகளை அகற்றும் போது செந்தூல் போலீஸ் நிலையத்தில் தீ பற்றியது

கோலாலம்பூர், செந்தூலில் உள்ள போலீஸ் ஆதாரங்கள் சேமிப்புக் கிடங்கு ஒன்றில், பட்டாசு அகற்றும் நடவடிக்கை தவறாக நடந்ததால் தீ மற்றும் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டன.

நேற்று மதியம் போலீசார் பட்டாசுகளை அகற்றும் பணியை முடித்த பிறகு தீ விபத்து ஏற்பட்டது என்று செந்துல் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் பெஹ் எங் லாய்(Beh Eng Lai) மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அந்த இடம் ஆதாரங்களை சேமிப்பதற்கானது. பட்டாசுகளை அகற்றும் செயல்முறைக்குப் பிறகு, தீ பரவத் தொடங்கியது,” என்று அவர் கூறினார்.

மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இணையவாசிகள் புகை வெளியேறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். பட்டாசு வெடிக்கும் சத்தம் பல வீடியோக்களில் கேட்கிறது.

வெடிப்பின் காரணமாக செந்துலில் உள்ள ஒரு வரிசை கார்கள் தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. வெடிப்பு மிகவும் சத்தமாக இருந்தது !” என்று ட்விட்டர் பயனர் @xnxthxrmxthxr95 கூறினார்.

மார்ச் மாதம் கைப்பற்றப்பட்ட 1,059 பெட்டிகள் மற்றும் 35 சாக்கு பட்டாசுகளை அழிக்க நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பிறகு, செந்தூல் போலீசார் வெடிபொருட்களை அப்புறப்படுத்தியதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.அந்த கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு RM4.17 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

செந்தூல் போலீசார் இந்த நிகழ்வுக்கு ஊடகங்களை அழைத்ததாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பட்டாசு குவியலை அணைக்க தயார் நிலையில் இருப்பதாகவும், அது ஒரு புல்டோசரால் நசுக்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பட்டாசு பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க உள்ளது, பட்டாசுகள் தண்ணீரில் மூழ்கும் போது அதை புல்டோசரால் (backhoe)  நசுக்க வேண்டும்,” என்று பெஹ் மலேசியாகினியிடம் கூறினார்.

இதற்கிடையில், மாலை 6.22 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து 60 பணியாளர்களை திரட்டியதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீயணைப்புத் துறை, 10 நிமிடங்களுக்குப் பிறகு வந்தபோது, ​​கட்டிடத்தின் 30%, 50 வாகனங்களை உள்ளடக்கிய திறந்த வெளியில் 80% தீயில் மூழ்கியது.