கையை இழந்தும் மனம்தளராமல் மாணவர்களின் மகிழ்ச்சிக்காக உழைக்கும் ஆசிரியர்

தங்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தின் ஒரு வடிவமாக, தங்கள் குறிப்பேடுகளில் குட்டி நட்சத்திரங்களை முத்திரை குத்துவது அல்லது சிறப்பாகச் செய்த வேலைக்காக தங்கள் பணத்திலிருந்து சிறு பரிசுகளை வழங்குவது முதல் வரவிருக்கும் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் இலவச கூடுதல் வகுப்புகளை பெரும்பாலான ஆசிரியர்கள் வழங்குவதுண்டு.

வகுப்பறை நன்கு அலங்கரிக்கப்பட்டதாகவும், வசதியானதாகவும், கற்றல் சூழலைக் கொண்டிருப்பதையும் உறுதிசெய்வது ஆசிரியர்களுக்கு மற்றுமொரு வழியாகும்.

கிளந்தான் பாசிர் மாஸ்-சில் உள்ள டோக் உபான் தேசியப்பல்ளி  ஆசிரியர் அப்துல்லா அப்துல் காதிர், 28, அப்படிப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர்.

அவரது வகுப்பறைக்குள் நுழையும் போது, ​​​​அறையை அழகுபடுத்திய அந்த  பொறுப்பான ஆசிரியர் ஒரு மாற்றுத் திறனாளி என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

“அறிவிப்புப் பலகை அலங்கரித்தல், பணி அட்டவணை, நிறுவன விளக்கப்படம், கால அட்டவணை, திரைச்சீலைகளை  தைத்தல், வகுப்பறைக்கு வண்ணம் அடிப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன்,” என்று அப்துல்லா கூறினார்.

தனது மாணவர்கள் வசதியான சூழலில் கற்க வேண்டும் என தான் விரும்புவதால், அனைத்து வேலைகளையும் செய்ய தான் தயங்கவில்லை என்கிறார் அவர்.

“எனக்கு ஒரு கை மட்டுமே இருந்தாலும், அப்படியெல்லாம்  செய்ய நான் உறுதியாக இருக்கிறேன், ஏனென்றால் ஒவ்வொரு முறை நாம் கஷ்டப்படும்போதிலும் அதிலிருந்து ஒரு ஞானத்தை நாம் கற்றுக்கொள்கிறோம் அதுவே நமக்கு சிறந்த வெகுமதி என்பதை நான் அறிவேன்,” என்று அவர் மனம் நிகிழ கூறுகிறார்.

பாசிர் மாஸைச் சேர்ந்த அப்துல்லா, ஆகஸ்ட் 2018 முதல் அரந்தப் பள்ளியில் கற்பித்து வருகிறார், வகுப்பறையை அலங்கரிக்க சுமார் ரிம1,000 சொந்தமாக செலவிட்டதாக அவர் கூறினார். அவரது மாணவர்கள் தனது முயற்சிகளுக்கு நேர்மையான மற்றும் அன்பான கருத்துக்களைக் கூறியபோது, ​​அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்.

“இந்த ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி விடுமுறைக்கு பிறகு, ​​மாணவர்கள் தங்கள் பள்ளி அமர்வுகளை மார்ச் மாதம் தொடங்கியபோது வகுப்பறையை நான் அலங்கரித்தேன்.”

“அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். சிலர் வகுப்பறை ‘வீடு போல் இருக்கிறது’ என்று கூறினார்கள்,” என்றார் அவர்.

வகுப்பறை மாற்றத்திற்குப் பிறகு, மாணவர்கள் அதிக ஆர்வத்துடன், தினமும் பள்ளிக்கு வருவதை விரும்புவதை என்னால் காணமுடிந்தது என்கிறார்.

பாங்கியில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் ஐபிஜி இஸ்லாமியக் கல்வியில் பட்டம் பெற்ற அப்துல்லா, தான் உருவாக்கிய கற்பித்தல் கருவிகளை மற்ற ஆசிரியர்களும் பயன்படுத்தும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் பொதுவாக அதே பள்ளியில் தனது சக ஆசிரியர்களுடன் தனது யோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறார். மற்றும் பிற பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள்  கூட  தன்னை ஆலோசனை கேட்டு நாடுவதாக முகத்தில் புன்னகை மலர கூறுகிறார்.

அவரது உடல் குறைபாட்டை பற்றி கேட்டபோது, ​​மார்ச் 2018 இல், பகாங்கில் உள்ள பென்டாங்கில் தனது கார் பள்ளத்தாக்கில் மோதியதில், தனது வலது கையை இழந்ததாகவும்,கோலாலம்பூரில் உள்ள பங்சார் தேசிய பல்ளிக்கு  பணியமர்த்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இது நடந்ததாக அப்துல்லா கூறினார்.

விபத்திற்குப் பிறகு ஆரம்ப நாட்களில், உடல் குறைபாடு, ஆசிரியராக தனது வேலையைச் செய்வதிலிருந்து அவரைத் தடுத்ததாக உணர்ந்ததால், அவர் இந்த பணியை கைவிடுவதைப் போல உணர்ந்ததாகவும், ஆனால் , அவரது தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உந்துதலால், அவர் தொடர்ந்து கற்பிப்பதில் உறுதியாய் இருந்ததாகவும் கூறினார்.

பங்சாரிலிருந்து  டோக் உபானுக்கு மாற்றப்பட்டதால் அவர் தனது குடும்பத்துடன் நெருக்கமாக இருக்க முடிந்தது , மேலும் இந்த பணியை தொடர அவருக்கு உதவியாகவும் உந்துதலாகவும்  இருந்தது என்றும் அந்த மாற்றுத்திரனாளி  கூறினார்.

FMT