அரசு துணை இயக்குனர் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என 46 குற்றச்சாட்டுகள்

2019 மற்றும் 2021 க்கு இடையில் ரிம55,020 சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என  46 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் அரசாங்கத் துறையின் ஒரு அதிகாரி இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

சபா மாநில, ஒப்பந்த சேவை மையத்தில் J44 கிரேடு சிவில் பொறியாளராக இருக்கும் 42 வயதான மஹ்ரியாட்டி பஹ்ரின்(Mahriyatty Bahrin), நீதிபதி அபு பக்கர் மனட் முன் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் பிரிவு 17 (a) இன் கீழ் 19 குற்றச்சாட்டுகளும், பிரிவு 16 (a) (B) இன் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளும், அதே சட்டத்தின் பிரிவு 18 மற்றும் பிரிவு 23 இன் கீழ் தலா ஒரு குற்றச்சாட்டும் மஹ்ரியாட்டிக்கு எதிராக உள்ளது.

மஹ்ரியாட்டி 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் லஞ்சத்தின் மதிப்பில் ஐந்து மடங்குக்கு குறையாத அபராதம் அல்லது ரிம. 10,000 எது அதிகமோ அதை தண்டனையாக பெருவார்.

அதுமட்டுமின்றி, குற்றவியல் சட்டத்தின் 165வது பிரிவின் கீழ் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து 21 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.

மாநிலத்தில் பல ஒப்பந்தக்காரர்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து சான்றிதழை அங்கீகரிப்பதற்கான தூண்டுதலாக லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கை ஜூலை 21-ம் தேதி மறு விசாரணைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.