தொழிலார்கள் பற்றாக்குறையை தீர்க்க எங்களால் உதவ முடியும் – விரக்தியடைந்த அகதிகள்

பல அகதிகள் மலேசியாவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அன்றாட வாழ்க்கையைச் சந்திக்கப் போராடுகிறார்கள் – மலேசியா அதிக எண்ணிக்கையிலான லயல் நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்வது அவர்களைத் கவலைப்படுத்துகிறது.

இதனால் நானும் மற்ற அகதிகளும் விரக்தியாகவும், விரும்பத்தகாதவர்களாகவும் இருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த அகதி அகா அண்டுல் சத்தார் பத்திரிகையாளரிடம் கூறினார்.

அஹ்மதியா முஸ்லிமான இவர், பலுசிஸ்தானில் மத துன்புறுத்தலில் இருந்து தப்பி 2016 இல் மலேசியாவிற்கு அடைக்கலம் தேடி வந்தார்.

மலேசியாவில் வேலை கிடைக்கும் என்று நினைத்தார் ஆனால் வாய்ப்புகள் இல்லாததால் மனம் உடைந்ததாக தெரிவிக்கிறார்.

“மலேசிய அரசாங்கம் எங்களை வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்று அனைவருக்கும் தெரியும், இது இங்கு எங்கள் வாழ்க்கையை பாதித்துள்ளது,” என்று கூறினார்.

அகா, 44, இப்போது வடக்கு-தெற்கு முன்முயற்சி (North South Initiative) ஆர்வலர் குழுவில் சமூக ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமூக மேம்பாட்டாளராக உள்ளார்.

பிரதான ஊடகங்களால் அகதிகள் பெரும்பாலும் மோசமான வகையில்  சித்தரிக்கப்படுகிறார்கள், இதனால் முதலாளிகள் அவர்களை வேலைக்கு அமர்த்த தயங்குகிறார்கள் என்று அவர் கூறினார். ஆனால் மலேசியாவில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியோ அல்லது நாம் வகிக்கக்கூடிய முக்கியப் பாத்திரங்களைப் பற்றியோ யாரும் பேசுவதே இல்லை” என்று அவர் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

“தொழிலாளர் நெருக்கடி ஏற்பட்டபோது தொற்றுநோய்களின் போது கூட, நாங்கள் உதவ தயாராக இருந்தோம். நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

மியான்மரில் உள்ள ஸ்ஓமி  சமூகத்தைச் சேர்ந்த கய் சியான்பாவ், அகதிகளுக்கு சட்டத்தின் மூலம் சம வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறார்.

மியான்மரில் உள்ள சோமி சமூகத்தைச் சேர்ந்த அகதியான கய் சியான் பாவ், அகதிகள் பற்றிய மோசமான கதைகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் “நாங்கள் கெட்டவர்கள் இல்லை. பொதுமக்கள் தங்களையும் , தங்களது கலாச்சாரத்தையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அவரது சமூகம் அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டதால்  2010 இல் மலேசியாவிற்கு வந்தார்.

தனது சமூகத்தைச் சேர்ந்த பல அகதிகள் மலேசியாவில் நம்பிக்கையற்ற உணர்வை உணர்கிறார்கள், ஏனெனில் அவர்களால் தங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்க முடியவில்லை.

“வேலை செய்ய எங்களுக்கு உரிமை இல்லை என்பது போல் உள்ளது,” , மேலும் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தம் மனச்சோர்வடையச் செய்வதாக கூறினார்,

அரசாங்கமும் முதலாளிகளும் அகதிகளின் திறனை அங்கீகரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக வேலை வாய்ப்புகளில் அவர்களை விலக்கக்கூடாது என்றும் கய் கூறினார்.

“நாங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்க உதவ முடியும் மற்றும் நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதால் வேலை செய்யலாம். மேலும் உழைப்பால் , நன்கொடையை இன்றி வாழ முடியும் ,” .

நாட்டின் சட்டங்களும் அரசியலமைப்பும் அகதிகளுக்கு சம வாய்ப்புகளைப் பாதுகாத்து வழங்கும் என்று அவர் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ரோஹிங்கியா அகதி சைஃப், தனது முதல் பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட விரும்புகிறார், பல ரோஹிங்கியாக்கள் வேலை செய்ய விரும்புவதாகவும், வேலையை கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

“இருப்பினும், அகதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை மற்றும் முதலாளிகளால் இழிவாக பார்க்கப்படுகிறார்கள், இது அவர்களுக்கு பாதுகாப்பற்றதாகவும் வருத்தமாகவும் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

27 வயதான சைஃப், தனது ஒன்பது வயதில் மியான்மரை விட்டு தனது குடும்பத்துடன் வங்கதேசத்திற்கு சென்றார். 2018 இல், அவர் உயர் கல்வியைத் தொடர மலேசியா வந்தார்.

அகதிகளை வேலை செய்ய அனுமதிப்பது நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று ரோஹிங்கியா அகதி சைஃப் கூறுகிறார்.

கிளாங்கின் மேருவில் உள்ள ஒரு மையத்தில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதன் மூலம் இங்குள்ள தனது சமூகத்திற்கு உதவுதை நன்றியை திரும்ப செலுத்தும் சில அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக தன்னைக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

முதலாளிகள் பொதுவாக அகதிகளை வேலைக்கு அமர்த்துவதற்கு தயங்குவதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆவணங்களுக்கு அதிக கட்டணம் செலுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தொற்றுநோய்க்கு பின்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்துவது கடினமாக உள்ளது.புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரிய தொகையை செலுத்துவதற்கு பதிலாக, முதலாளிகளும் அரசாங்கமும் அந்த பணத்தை இங்கு அகதிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அகதிகளை வேலைக்கு அமர்த்துவது “வெற்றி-வெற்றி சூழ்நிலை” என்று சைஃப் கூறினார், ஏனெனில் இது நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறைக்கு உதவும் மற்றும் அகதிகளுக்கு ஒரு நோக்கத்தை வழங்கும்.

மலேசியாவில் தற்போது உற்பத்தி (627,000), தோட்டம் (120,000) மற்றும் கட்டுமானத் (550,000) தொழில்களில் குறைந்தது 1.2 மில்லியன் தொழிலாளர்கள் தேவைப்படுகிறது.

மலேசியாவில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் (UNHCR) படி, நாட்டில் சுமார் 181,000 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளனர், அவர்களில் 85 சதவீதம் பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள், இதில் 103,000 ரோஹிங்கியாக்கள் உள்ளனர்.

மீதமுள்ளவர்கள் பாகிஸ்தான், ஏமன், சிரியா மற்றும் சோமாலியா உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

FMT