மருத்துவர், காயங்கள் பற்றி மாட் சாபு சொன்னதை ஒப்புக் கொள்கிறார்

ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு-வுக்கு ஏற்பட்ட காயங்கள், அவர் சொன்ன நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக இருப்பதாக மருத்துவர் ஒருவர் இன்று கூறியிருக்கிறார்.

அன்றைய தினத்தில் அவசரமான மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 31 வயது டாக்டர் நுருல் அஸ்லியன் நோர்ஸான் அவ்வாறு தெரிவித்தார்.

“நான்,  தாம் வாகனம் ஒன்றினால் தாக்கப்பட்டதாக நோயாளி கூறியதை ஏற்றுக் கொண்டேன். காரணம் சாலையில் அவர் நேரடியாக விழுந்ததைக் காட்டும் எந்தக் காயத்தையும் நான் அவரிடம் பார்க்கவில்லை.”

“உயரமான இடத்திருந்து விழுந்ததினால் ஏற்பட்ட காயங்களாகவும்  அவை இருக்கக் கூடும். ஆனால் அதிகமான அழுக்கைக் காணவில்லை. வீக்கமாகவும் சிவப்பாகவும் சிராய்ப்புக்களாகவும் அவை இருந்தன.”

பெர்சே 2.0 பேரணி தொடர்பான பிரச்னைகள் மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் அவர் சாட்சியமளித்தார்.

TAGS: