“நஜிப் கொடி” சம்வம் மீது மாணவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை

அம்னோ தலைமையகத்தில் சிறிது நேரத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடியை அகற்றி விட்டு தங்களது எதிர்ப்பு பதாதையைப் பறக்க விட்டதற்காக சனிக்கிழமையன்று அங்கு நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை.

ஒரு கருத்தை வெளியிடுவதற்கு அது தங்களுக்கு உள்ள உரிமை என அவர்கள் கூறினர்.

“அரசாங்கத் தலைவர் என்னும் முறையில் நஜிப் தலைமைத்துவம் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து விட்டதைக் காட்டும் வகையில் பிரதமர் உருவம் இருந்த கொடியை இறக்கும் நடவடிக்கை அமைந்திருந்தது,” என எஸ்எம்எம் என்ற Solidariti Mahasiswa Malaysia அமைப்பின் தலைவர் அகமட் ச்சுக்ரி அப்துல் ரஜாப் கூறினார்.

பிரதமருடைய உருமாற்றக் கோட்பாடுகள் “மக்களை நம்ப வைப்பதில் தோல்வி கண்டு விட்டன என விளக்கிய அவர் பல அரசாங்கக் கொள்கைகளில் காணப்படும் குளறுபடிகளையும் சுட்டிக் காட்டினார். எடுத்துக்காட்டுக்கு

“கொடூரமான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்யப் போவதாக வாக்குறுதி அளித்த சில நாட்களுக்கு பின்னர் பலர் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது அவற்றுள் ஒன்றாகும்.”

ஆகவே அந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த மாணவர் அமைப்புக்கள் கூட்டணி மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என கோலாலம்பூர், சிலாங்கூர் அசெம்பிளி மண்டபத்தில் நிருபர்களைச் சந்தித்த அகமட் சூக்ரி கூறினார்.

கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட கல்விச் சுதந்திரத்துக்கான ஊர்வலத்தின் போது அம்னோ தலைமையகத்தில் கடந்த கால நிகழ்கால அம்னோ தலைவர்களைக் கௌரவிக்கும் வகையில் பறக்க விடப்பட்டிருந்த கொடிகளுக்கு இடையில் இருந்த நஜிப் கொடியை சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இறக்கினர்.

அதற்குப் பதில் “Bebaskan (Liberate) Academic Freedom” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த பதாதையை பறக்க விட்டனர். ஒரு நிமிடத்துக்கு அதனைப் பறக்க விட்ட பின்னர் அசல் கொடியை மீண்டும் ஏற்றினர்.

அந்தச் சம்பவம் பல அம்னோ உறுப்பினர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. அவர்களில் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதினும்  உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லாவும் மாணவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

TAGS: