இண்டர்லோக் நாவலுக்கு எதிராகக் குரல் கொடுத்த 54 போராட்டவாதிகள் மீது சுமத்தப் பட்டிருக்கும் அப்பட்டமான பழி மீட்டுக்கொள்ள சட்டத்துறை தலைவர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இன்டர்லோக் நாவல் மீட்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சிடமிருந்து எவ்வகையான முறையான அறிவிப்பும் வெளிவராத சூழலில் நாடெங்கும் இதைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர்.
பல தரப்புகள் இதனைப் பெரும் வெற்றியாகவும் அதற்குத் தாங்களே காரணம் என்றும் செய்திகள் வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
உண்மை நிலை என்னவென்றால் இண்டர்லோக் நாவலை தடை செய்ய கோரி இண்ட்ராப் மக்கள் சக்தி ஏற்ப்பாடு செய்த போராட்டத்தில் சுமார் ஐயாயிரம் பேர் 27 பெப்ரவரி 2007 இல் கோலாலம்பூரில் களமிறங்கினர்.
இந்தப் போராட்டதில் சுமார் 350 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர். மொத்தம் 54 பேர் மீது இண்டர்லோக் நாவலை தடை செய்யக்கோரி வளியுறித்தியது சட்டப்படி குற்றம் என வழக்கு பதிவு செய்து தற்சமயம் நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டு வருகிறது.
பல்லின சமூகம் வாழும் மலேசிய திருநாட்டில் யாரையும் புண்படுத்தாமல் அனைத்து செயல்பாடுகளும் அமைய வேண்டும், குறிப்பாக இளைய தலைமுறையினர்களிடையே ஒருவர் மற்றவரின் சமய, கலாச்சார, பண்பாடுகளை அறிந்து போற்ற கற்பிக்கபட வேண்டும். இன்டர்லோக் போன்ற நூல்கள் இந்த நோக்கத்திற்க்கு அப்பாற்பட்டவை என இண்ட்ராப் போராட்டம் நடத்தியது.
அதன் விளைவுதான் 54 பேர் மீது அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கு. ஆனல், இன்று அதே அரசாங்கம் இண்டர்லோக் நாவலை பாடதிட்டத்திலிருந்து அகற்றுவதாக மனித வள அமைச்சர் (குறிப்பு- கல்வி அமைச்சர் அல்ல) மூலமாக அறிவிப்பு செய்து இருக்கிறது.
இந்த அறிவிப்பு உண்மை என்றால், அன்று இண்ட்ராப் மக்கள் சக்தி நியாயமான ஒன்றுக்காகத்தான் போராடியுள்ளது என நிரூபனம் ஆகிறது. நியாயத்துக்காக போராடியது எந்த வகையில் குற்றமாகும்? நியாயத்துக்காக போராடியவர்களின் மீது வழக்கு பதிவு செய்து வழக்காடுவது எப்படி தர்மமாகும்?
எனவே இண்டர்லோக்கிற்கு எதிராகக் குரல் கொடுத்த 54 இண்ட்ராப் மக்கள் சக்தி போராட்டவாதிகள் மீது சுமத்தப் பட்டிருக்கும் அப்பட்டமான பழி மீட்டுக்கொள்ள அட்டர்னி ஜெனரல் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தை இந்த அப்பாவிகளின் மீது பழி சுமத்துவதற்கு பயன் படுத்தாமல் வேறு நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த மக்கள் நல அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இத்தகையப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்க்கு முன் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகளின் சம்மதத்தை பெறுதல் அவசியம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று இண்ட்ராப் மக்கள் சக்தி சிலாங்கூர் ஒறுங்கிணைப்பாளர் கி. தமிழ்ச்செல்வம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.