உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஒரு இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து உடனடி விசாரணைக்கு மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் நேற்று அழைப்பு விடுத்தார்.
அவர் 2019 ஆம் ஆண்டு முதல் அந்தப் பணிப்பெண்ணுக்கு செலுத்தப்படாத ஊதியமாக RM32,000 பாக்கி உள்ளதாகவும் கூறினார்.
சரவணன் ஒரு ஊடக அறிக்கையில், அந்த ப்பெண்ணின் முதலாளிகள் பத்துமலை வட்டாரத்தை சார்ந்த தம்பதிகள் என்றும், அத்தகைய முதலாளிகள் நாட்டிற்கு மோசமான எடுத்துக்காட்டு என்றார்.
இந்த தம்பதியினர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் மலேசியாகினியால் பெயர்களை வெளியிட இயலாது.
வீட்டு வேலையாட்களை துன்புறுத்தலை தவிர்க்க அப்படி நடந்து கொள்ளும் அனைத்து முதலாளிகளின் பெயரையும் அவமானப்படுத்த போவதாக சரவணன் உறுதியளித்தார்.
“இன்று முதல், இந்த வழக்கு விசாரணையில் இருந்தாலும் மனிதாபிமானமற்றதாகக் கண்டறியப்படும் முதலாளிகளின் அடையாளத்தை தொழிலாளர் துறை பாதுகாக்காது,” என்று அவர் உறுதியளித்தார், முதலாளிகள் தங்கள் ஊழியர்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட வேண்டாம் என்றும் நினைவூட்டினார்.
“இதுபோன்ற வழக்குகளில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் அவை நாட்டின் நற்பெயரை பாதிக்கின்றன.”
“உள்ளூர் அல்லது வெளிநாட்டினராக இருந்தாலும், தொழிலாளர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறை மற்றும் ஒடுக்குமுறையிலும் அமைச்சகம் ஒருபோதும் சமரசம் செய்யாது.”
“கட்டாய உழைப்பின் கூறுகளுடன் முரண்படும் செயல்கள் உட்பட தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்கத் தவறினால் முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் வலியுறுத்தினார்.
மனிதவளத்துறை அமைச்சர் சரவணன்
துன்புறுத்தலுக்கான இழப்பீடு
இதற்கிடையில், மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ, இந்த வழக்கை நேற்று முன்னிலைப்படுத்தினார், ஜைலிஸ் என்று மட்டுமே அழைக்கப்பட விரும்பும் அந்த வீட்டுப் பணிப்பெண், தம்பதியருக்கு வேலை செய்த மூன்று ஆண்டுகளில் அவர் அனுபவித்த உடல் உபாதைகளுக்கு இழப்பீடு பெறத் தகுதியானவர் என்றார்.
புதனன்று மருத்துவமனையில் ஜைலிஸ், 46, (மேல் புகைப்படம்) சென்றபோது, தனது முகத்தில் கடுமையான காயங்கள், வீங்கிய கண் மற்றும் இரண்டு காதுகளிலும் பலத்த காயங்கள் இருப்பதாகக் கூறினார்.
அவளுடைய முதலாளி
அவரது காயங்களைத் தவிர, ஹெர்மோனோ அவரின் மெலிந்த தோற்றத்தைக் கண்டும் அதிர்ச்சியடைந்தார், “அவர் மலேசியாவிற்கு வந்ததிலிருந்து 30 கிலோ எடையைக் குறைத்துள்ளார்” என்று விவரித்தார்.
மேற்கு சுமத்ராவைச் சேர்ந்த ஜைலிஸ் ஆகஸ்ட் 30 அன்று தனது முகத்திலும் முதுகிலும் மரத்துண்டுகளால் தாக்கப்பட்ட பின்னர் தனது முதலாளியின் வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்று அவர் கூறினார். கை உடைந்தது போன்ற பழைய காயங்களுக்கும் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பளம் மற்றும் இழப்பீடு வழங்குவது, அதோடு அவர்களின் கிரிமினல் குற்றங்களில் இருந்து இந்த முதலாளிகளை விடுவிக்கக்கூடாது என்று ஹெர்மோனோ கூறினார்.
ஜைலிஸின் கிரிமினல் குற்றச்சாட்டை கோம்பாக் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வியாழன் அன்று ஒரு 35 வயதுடைய பெண் ரிமாண்ட் செய்யப்பட்டபோது, ஹெர்மோனோ “தனது வீட்டில் குற்றச் செயல்கள் நடந்தபோது அந்த பெண்ணின் கணவர் எதுவும் செய்யவில்லை என்பதால் முதலாளியின் கணவரும் பொறுப்பேற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மலேசியாவுக்கான இந்தோனேசியாவின் தூதர் ஹெர்மோனோ
ஜைலிஸிக்கு செலுத்த வேண்டிய ஊதியத்தில் RM32,000 தவிர, வேலை வாய்ப்புச் சட்டம் 1955 (சட்டம் 265) இன் பிரிவு 99A இன் கீழ் ஊதியத்தை வழங்காததற்காக தம்பதியருக்கு RM50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வழங்கப்படாத ஊதியம் தவிர, முதலாளிகள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சரவணன் தெரிவிக்கவில்லை.