கடுமையாக குறைகூறப்பட்ட அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதாவை (Peaceful Assembly Bill 2011) கடந்த மாதம் நாடாளுமன்ற மக்களவை ஏற்றுக்கொண்ட வெறும் 22 நாள்களுக்குப் பின்னர் அதை நாடாளுமன்ற மேலவை ஏற்றுக்கொண்டது.
அம்மசோதவை பிரதமர்துறை துணை அமைச்சர் விகே லியு தாக்கல் செய்தார். நான்கு மணி நேர விவாதத்திற்குப் பின்னர் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அனைத்து உறுப்பினர்களையும் விவாதத்தில் பங்கேற்ற மேலவை தலைவர் அபு ஸஹார் அனுமதித்தார். ஆனால், ஆறு பின் மற்றும் நான்கு பக்கத்தான் செனட்டர்கள் மட்டுமே விவாதத்தில் பங்கேற்றனர்.
39 செனட்டர்களின் ஆதரவோடு அம்மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது.