நாடாளுமன்றம் கலைக்கப்படுமா, நேரம் இருந்தால் மாமன்னருடன் ஆலோசிக்க இயலும் – பிரதமர்

இன்று மாமன்னரை சந்திக்கும் பிரதமர் நேரம் கிடைக்குமானால்  அவரிடம் நாடாளுமன்றத்தை கலைக்க கூடிய கருத்தை விவாதிக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

இன்று மாலை 4 மணியளவில் மாமன்னரை பிரதமர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பானது பொதுவாகவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றியதாக அமையும் என்கிறார் பிரதமர்.

நாடாளுமன்றம் கலைப்பது பற்றிய கேள்வியை மன்னரிடம் பிரதமர் வினவுவாரா என்றுக் கேட்ட பொழுது அதற்கு பிரதமர் உறுதியாக பதில்சொல்ல இயலாது, இதைப் பற்றி நாங்கள் உரையாடுவோமா இல்லையா என்று தெரியாது என்று பதிலளித்தார்.

மேலும் அமைச்சரவை சம்பந்தப்பட்ட விபரங்களை விவாதிக்கும் போது நேரம் பற்றாக்குறையாக இருந்தால் நாடாளுமன்றம் கலைப்பு பற்றி பேச இயலாது என்பதையும் கோடி காட்டி உள்ளார் பிரதமர். – பெர்னாமா