“இது அம்னோ ஜமீன்தார்களும் ஜமீன்தார்களும் மோதிக் கொள்ளும் விஷயமாகும். தங்களுக்கு இன்னும் மிஞ்சியிருக்கும் நேரத்துக்குள் உணவுக் களஞ்சியத்தில் தங்களுடைய பங்கைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்கள் அனைவரும் போராடுகின்றனர்.”
ஷாரிஸாட் உதவியாளர்கள் ‘தாக்கியதாக’ செராஸ் அம்னோ குற்றம் சாட்டுகிறது
பீரங்கி: அம்னோவில் அதிகாரத்திற்காக நிகழும் உட்பூசலில் இனம், சமயம், நாடு ஆகிய அம்சங்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறது.
அண்மைய அம்னோ பொதுப் பேரவையில் ஒற்றுமைக்கும் கட்சிக்கு விசுவாசத்துக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன.
இது அம்னோ ஜமீன்தார்களும் ஜமீன்தார்களும் மோதிக் கொள்ளும் விஷயமாகும். தங்களுக்கு இன்னும் மிஞ்சியிருக்கும் நேரத்துக்குள் உணவுக் களஞ்சியத்தில் தங்களுடைய பங்கைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்கள் அனைவரும் போராடுகின்றனர்.
அம்னோ தேர்தல் வேட்பாளர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்ததும் மேலும் குழப்பங்கள் மூளும் என்பதற்கு அந்தச் சம்பவம் முன்னோடியாகும்.
கேஎஸ்என்: செராஸ் அம்னோ கடந்த அம்னோ பொதுப் பேரவையில் நீங்கள் இல்லையா? அந்த மாது தமது ஆவேசமாக பேசியதை நீங்கள் கவனிக்கவில்லையா?
அவர் அம்னோவுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் என்ன சொல்ல வந்தார் தெரியுமா? நீங்கள் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது. அப்படித் தலையிட்டால் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்பதே அவர் வழங்கிய செய்தியாகும். பக்காத்தான் ராக்யாட்டைத் தான் அவர் எச்சரிக்கிறார் என அம்னோ பேராளர்கள் நினைத்திருந்தால் அது எவ்வளவு முட்டாள்தனமானது. வருத்தமாகவும் இருக்கிறது.
அம்னோ தலைவருமான பிரதமரும் கூட அந்த மாதுவைப் பற்றியும் அவரது மாடுகளைப் பற்றியும் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் பற்றியும் 250 மில்லியன் ரிங்கிட் பற்றியும் எதுவும் பேச மறுக்கிறார். அதற்குத் துணிச்சலுமில்லை.
டிபிஎன்: நாம் இப்போது ‘வனிதா’ (பெண்கள்) குண்டர்கள் கட்சியில் இருப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கு எதிராக அம்னோ நடவடிக்கை எடுக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம். டிவி தீகாவும் உத்துசான் மலேசியாவும் அது குறித்து செய்தி வெளியிடும் என நான் நம்புகிறேன்.
அடையாளம் இல்லாதவன்_4031: சில கேள்விகளுக்குக் குறிப்பாக பொது நிதிகள் பயன்படுத்தப்பட்ட விஷயங்களுக்குப் பதில் தேவை. அந்தப் பணம் மாடுகள அல்லது வெள்ளாடுகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது முக்கியமில்லை.
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட கணக்கை தணிக்கை செய்த தலைமைக் கணக்காய்வாளர் அது தனியார் கடன் அல்ல என்பதை உறுதி செய்துள்ளார்.
அது தனியார் கடன் அல்ல என்றால் அது அரசாங்கத்திலிருந்து பெறப்பட்ட பொதுக் கடனாக இருக்க வேண்டும். மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அது குறித்து மக்கள் கவலைப்படுவதைத் தடுக்க முடியாது.
தங்கள் பணம் சம்பந்தப்படும் போது வாக்காளர்கள் தங்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும்.
தான் ஹெங் கென்: அம்னோ தன்னுடன் ஒத்துப் போகாதவர்களை அல்லது தன்னை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துவதற்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வழியைத்தான் பின்பற்றி வந்துள்ளது. அந்த வழி இப்போது உட்பூசலிலும் பயன்படுத்தப்படுகிறது.
அம்னோவுக்கு நல்ல காலம் முடிந்து முடிவு மிக அருகில் வந்து விட்டதற்கு அது தெளிவான சகுனமாகும்.