முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ(Charles Santiago) இந்த ஆண்டு நடைபெறவுள்ள 15வது பொதுத் தேர்தலை (GE15) நிறுத்த நீதிமன்ற உத்தரவை நாடியுள்ளார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அழைப்பாணையில், DAP சட்டமன்ற உறுப்பினர், இடைக்காலப் பிரதமர் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையம் (EC) ஆகியோரை பிரதிவாதிகளாகப் குறிப்பிடப்பட்டனர்.
நாடாளுமன்றத்தை கலைக்க இஸ்மாயில் சப்ரி யாங் டி-பெர்துவான் அகோங்கிற்கு அளித்த விண்ணப்பம் கூட்டாட்சி அரசியலமைப்பின் 40(1) மற்றும் (1A) பிரிவுக்கு முரணானது என்று அறிவிக்குமாறு சார்லஸ் கோரினார்.