டிங்கி காய்ச்சல் பாதிப்பு 9.3% அதிகரித்துள்ளது

42 வது தொற்றுநோயியல் வாரத்தில் (Epidemiological week 42) டிங்கி காய்ச்சலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 137 அல்லது 9.3% அதிகரித்து 1,614 ஆக உள்ளது, இது முந்தைய வாரத்தில் 1,477 ஆக இருந்தது.

டிங்கி காய்ச்சலினால் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகச் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“இதுவரை பதிவாகியுள்ள டிங்கி காய்ச்சலின் மொத்த எண்ணிக்கை 48,109 ஆக உள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21,308 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 26,801 அல்லது 125.8% அதிகரித்துள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவான 16 இறப்புகளுடன் ஒப்பிடுகையில் டிங்கி காய்ச்சலால் 29 இறப்புகள் பதிவாகியுள்ளன. 13 இறப்புகள் அதிகரித்துள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

அவரது கூற்றுப்படி, முந்தைய வாரத்தில் அபாய இடங்கள் 53 உடன் ஒப்பிடும்போது EW 42 இல் மொத்தம் 51 அபாய இடங்கள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர், சபா (11), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா (8) மற்றும் கெடா மற்றும் மலாக்காவில் தலா 1 ஆகிய 39 இடங்கள் இருப்பதாக நூர் ஹிஷாம் கூறினார்.

மழை மற்றும் வெப்பமான காலநிலை ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

எனவே, ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10 நிமிடங்களாவது வீட்டைச் சுற்றி ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களைச் சரிபார்த்து அழிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

சிக்குன்குனியாவைப் பொறுத்தவரை, பினாங்கில் மூன்று, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இரண்டு மற்றும் சிலாங்கூர் மற்றும் மலாக்காவில் தலா ஒன்று என மொத்தம் 7 பேர் சிக்குன்குனியாவுக்கு உள்ளாகியுள்ளனர்.  EW 42 இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.

இன்றுவரை சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 669 ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.