வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்குகிறது

எதிர்பார்த்ததை விட முன்னதாகவே நவம்பர் 7 முதல் மார்ச் வரை மலேசியாவில் வடகிழக்கு பருவமழை  பெய்யும்.

வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா அந்த காலகட்டத்தில், நான்கு முதல் ஆறு பருவமழை நிகழ்வுகளுக்கு இடையில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“முந்தைய பருவங்களைப் போலவே, பல நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்தால், தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கு அருகில் வெள்ளம் ஏற்படலாம்.

“அதிக அலை நிகழ்வுடன் ஒரே நேரத்தில் தொடர் கனமழை பெய்தால், வெள்ள அபாயம் அதிகரிக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 6 முதல் நவம்பர் 11 வரை மற்றும் நவம்பர் 22 முதல் நவம்பர் 27 வரை, அதைத் தொடர்ந்து டிசம்பர் 7-12, டிசம்பர் 22-26, ஜனவரி 6-10 மற்றும் ஜனவரி 21-25 வரை அதிக அலை நிகழ்வுகள் நிகழலாம் என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் போது, ​​பலத்த காற்று வீசுவதால், தென் சீனக் கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் பெரிய அலைகள் ஏற்படலாம்.

பொதுமக்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள், ஆலோசனைகள் மற்றும் வானிலை எச்சரிக்கைகளை மெட்மலேசியாயாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.met.gov.my, அதன் மொபைல் பயன்பாடு myCuaca மற்றும் அனைத்து மெட்மலேசியா  சமூக ஊடக தளங்களில் இருந்து பெறலாம்.

பொதுமக்கள் விசாரணைகளுக்கு 1-300-22-1638 என்ற திணைக்களத்தின் அவசர தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

 

 

-FMT