15வது பொதுத் தேர்தல் (GE15) திறமையான, நேர்மையான மற்றும் நம்பகமான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தளம் என்று மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாக்காளர்களுக்கு நினைவூட்டியுள்ளன.
கோலாலம்பூர் சிலங்கூர் சீன சமூக மண்டப அமைப்பு, இக்ராம் மலேசிய என்ற மலாய் இஸ்வாம் தேசிய அமைப்பு மற்றும் லிம் லியன் கியோக் அறவாரியம் இந்த அறை கூவலை விடுத்துள்ளனர்.
இந்த GE15 மக்கள் திறமையான, நேர்மையான மற்றும் நம்பகமான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இடமாகும். இது சுயநலம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலில் ஈடுபடும் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கான நேரமாகும்.
“நீங்கள் வாக்களிக்கச் செல்லவில்லை என்றால், தகுதியற்ற மற்றும் நாட்டை வழிநடத்தும் திறன் இல்லாத ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அர்த்தம்,” என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மலேசியர்களை வாக்களிக்கச் செல்லுமாறு அழைப்பு விடுத்தன, நாட்டிற்கான சிறந்த பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது அவர்களின் பொறுப்பு என்பதை வலியுறுத்தியது.
“மக்கள் வேட்பாளர்களின் தகுதிகள் மற்றும் திறன்களை அவர்களின் பின்னணி மற்றும் பதிவுகளின் அடிப்படையில் ஆராய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
எனவே, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பொறுப்பு, நம்பிக்கை, நேர்மை ஆகிய மூன்று பண்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
“திறமையான, நம்பகமான மற்றும் நேர்மையான தலைவர்கள் மட்டுமே மலேசியாவை இணக்கமான, வளர்ந்த மற்றும் மரியாதைக்குரிய நாடாக மாற்ற முடியும்”.
“இப்படிப்பட்ட ஒரு தலைவரின் பின்னால், மக்கள் ஒன்றிணைந்து அவருடைய தலைமைத்துவ சிந்தனைகளை ஆதரிப்பார்கள்,” என்று அவர் விளக்கினார்.
மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நியாயமான மற்றும் தூய்மையான தேர்தல் கொள்கைகளைக் கடைபிடிக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் அரசியல் கருத்துக்களை முன்வைக்கவும், மதம் மற்றும் இனம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.