அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், BN க்கு வாக்களிப்பது அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு வாக்களிப்பது போன்றது என்ற விமர்சனத்தின் மீதான கருத்தை மறுத்தார்.
ஜொகூர் பத்து பஹாட் மாவட்டத்தில் உள்ள அயர் ஹிதாமில் இன்று நடைபெற்ற BN கூட்டத்தில் பேசிய இஸ்மாயில் சப்ரி, “பக்காத்தான் ஹராப்பனுக்கு ஒரு ஓட்டு என்பது டிஏபி-க்கு போடும் ஒரு ஓட்டு”, என்றார்.
“ஹராப்பனின் ஆயர் ஹித்தம் வேட்பாளர் ஒரு மலாய்க்காரர் என்றாலும், அவருக்குப் பின்னால் DAP உள்ளது’.
“ஹராப்பனுக்கு ஒரு ஓட்டு, டிஏபிக்கு போடும் ஒரு ஓட்டு. அவர்களின் வலையில் விழ வேண்டாம். DAP-யின் எழுச்சியைத் தடுக்க நாம் எல்லா இடங்களிலும் ஹராப்பான் வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும்”.
அயர் ஹிதாமின் தற்போதைய MCA தலைவர் வீ கா சியோங்கை எதிர்கொள்ள ஹராப்பான் DAP மத்திய குழு உறுப்பினர் ஷேக் ஒமர் பகரிப் அலியை(Sheikh Omar Bagharib Ali) களமிறங்குகிறார்.
ஹராப்பான் அரசாங்கத்தில் இருந்தபோது, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது பெர்சத்துவைச் சேர்ந்தவர் என்றாலும், DAP தான் அதிகாரத்தில் இருந்தது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
மலாய் வாக்காளர்களைப் பயமுறுத்துவதற்கு அம்னோ அடிக்கடி DAPயை ஒரு போகிமேனாகப் பயன்படுத்தி வருகிறது, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உரிமைகளும் சலுகைகளும் அழிக்கப்படும் என்று கூறுகிறது.
BN -க்கு போடும் ஒரு ஓட்டு, ஜாஹிட்க்கு போடும் ஓட்டு என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளின் கருத்து மட்டுமே என்றும் இஸ்மாயில் கூறினார்.