“நம்பத்தக்க கதை அல்ல, ஆவாங் அடெக்”

  “எந்த நிறுவனம் ஐயா, நன்கொடைகளை இரகசியமாக, அதுவும் மாதாமாதம் கொடுத்து அப்படிக் கொடுக்கப்பட்டதை மூடி மறைக்கப் பார்க்கும்.”

ஆவாங் அடெக்: பணம் பெற்றது உண்மை, ஆனால்……..

மலேசியப் பிறப்பு: ஒரு துணை அமைச்சர் தம் அமைச்சுடன் தொழில்ரீதியில் தொடர்புகொண்ட வணிகர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று அவற்றைத் தம் சொந்த கணக்கில் வரவு வைப்பது ஏற்கத்தக்கதல்ல.அது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல. ஓர் அரசியல்வாதி தம் தொகுதி மக்களுக்காக நன்கொடையாகப் பெறும் பணத்தை எப்படி சொந்தக் கணக்கில் வரவு வைக்க முடியும்? வழக்குரைஞர்கள்கூட திருப்பிப் பட்டுவாடா செய்யப்பட வேண்டிய பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் அல்லவா போட்டு வைக்கிறார்கள்.

கேஜென்: மற்ற அம்னோ தலைவர்களுக்கும் இவருக்கும் வேறுபாடில்லை. என்ன, இவருடைய வண்டவாளம் வெளியில் தெரிந்து விட்டது. மற்றவர்கள் செய்வது வெளியில்  தெரிவதில்லை.

வெட்கம்கெட்ட இந்த மனிதர்கள் எவ்வளவு துணிச்சலாக பணத்தை வாங்கி அதைச் சொந்தக் கணக்கிலும் வரவு வைக்கிறார்கள், பாருங்கள். அவர்களுக்குத் தெரியும் எம்ஏசிசி-ஆல் (மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்) தங்களைத் தொட முடியாது என்பது.

ஏதாவது பதவிப் போராட்டம் ஏற்பட்டால்தான் இவர்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும்.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலைப் பாருங்கள். இன்னும் பதவியில் உறுதியாகத்தானே அமர்ந்திருக்கிறார்.

பல்லினவாதி: இது, தெளிவாக தெரியும் விசயம். துணை அமைச்சர் ஆவாங் அடெக் உசேன் பதவி விலக வேண்டும். பெற்ற பணத்துக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தைப் பார்த்தீர்களா. வேறொரு நோக்கத்துக்காகப் பெறப்பட்ட பணமாம்.

அதை ஏற்றுக்கொண்டால், பணத்துடன் பிடிபடும் ஒவ்வொருவரும் அது, அரசியல் நிதிக்கு வழங்கப்பட்ட நன்கொடை என்று சொல்லியே தப்பித்துக்கொள்வார்கள். இப்போதுதான் தெரிகிறது ஏன் மிகச் சிலரே ஷாரிசாட்டைக் கண்டித்தார்கள் என்பது. எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

அம்னோ உறுப்பினர்கள் கட்சியைக் காப்பாற்ற நினைத்தால் இப்படிப்பட்ட தலைவர்களைக் கூண்டில் ஏற்றுமாறு வலியுறுத்த வேண்டும்.தவறினால் அம்னோ மட்டும் சீரழியாது நாடும் சீரழியும்.

அம்னோ  உறுப்பினர்கள் அதைச் செய்யாவிட்டாலும் மலேசியர்கள் ஒன்றுதிரண்டு ஊழல்மிக்க, இனவாதமிக்க, சமயத் தீவிரவாதம் கொண்டவர்களை அடுத்த பொதுத் தேர்தலில் ஒழித்துக்கட்ட வேண்டும்.

பெயரிலி: உங்கள் தொகுதியில் நல்லது செய்ய நினைத்தால் அதற்கான நன்கொடைகளை கிளை/தொகுதி கணக்கில் வரவு வைப்பதுதானே முறை. அதற்கென தனி நிதியை உருவாக்குவது இன்னும் மேலானது.

ரோசி 2:  எந்த நிறுவனம் ஐயா, நன்கொடைகளை இரகசியமாக, அதுவும் மாதாமாதம் கொடுத்து அப்படிக் கொடுக்கப்பட்டதை மூடி மறைக்கப் பார்க்கும்.

அவருடைய கணக்கில் வரும் பணம் அவருடைய வருமானம் என்றாகும். அதற்கு வரி  கட்டினாரா? வருமான வரி வாரியம் விசாரிக்க வேண்டும்.

சீனாபுத்ரா: ஒரு துணை அமைச்சர் அதுவும் நிதி அமைச்சில் உள்ளவர் செய்யும் வேலையா இது?

TAGS: