GE15 க்குப் பிறகு GTA, BN, PN மற்றும் ஹராப்பான் ஆகியவற்றுடன் இணையாது – டாக்டர் எம்

15 வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக Gerakan Tanah Air (GTA), BN, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகத்தான் நேசனல் (PN) உடன் இணைந்து செயல்படாது என்று GTA தற்காலிக தலைவர் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

பெஜுவாங் தலைவரான மகாதீர் GTA, ஒத்துழைப்பை ஏற்படுத்த விரும்பினால், சபா மற்றும் சரவாக்கில் உள்ள மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை பிரதிநிதிகளுடன் வேறு வழிகள் உள்ளன என்று கூறினார்.

“விருப்பங்கள் உள்ளன. ஆனால் நான் முன்பு குறிப்பிட்ட மூன்று அல்ல. BN,  PN மற்றும் ஹராப்பான் அல்ல”.

“சபா மற்றும் சரவாக்கில் கட்சிகள் உள்ளன, தீபகற்பத்தில் கூடச் சில கட்சிகள் உள்ளன, அல்லது சுயேட்சைகளுடன் கூட உள்ளன, அவர்கள் எங்கள் தரங்களுக்கு இணங்கினால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அவரது மனைவி டாக்டர் சிட்டி ஹஸ்மா முகமட் அலி(Dr Siti Hasmah Mohamad Ali) மற்றும் பெஜுவாங் துணைத் தலைவர் மர்சுகி யஹ்யா(Marzuki Yahya) ஆகியோரும் உடனிருந்தனர். இவர் சுங்கை பெட்டானி நாடாளுமன்றத் தொகுதிக்கான GTA வேட்பாளரும் ஆவார்.

GTA என்பது Pejuang, Parti Bumiputera Perkasa Malaysia (Putra), Parti Barisan Jemaah Islamiah Se-Malaysia (Berjasa) and Parti Perikatan India Muslim Nasional (Iman) ஆகிய நான்கு அரசியல் கட்சிகளின் கூட்டணி ககாசான் பங்சா (Gagasan Bangsa). ஆகும்.

GE15இல், புத்ரா லோகோவைப் பயன்படுத்தும் கிளந்தானைத் தவிர. GTA வேட்பாளர்கள் பெஜுவாங் லோகோவைப் பயன்படுத்தி போட்டியிடுகின்றனர்.

BN, PN மற்றும் ஹராப்பான் ஆகியவற்றுடன் பணிபுரிய மறுப்பதால், GTA அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறாவிட்டாலும் தனக்கு கவலையில்லை என்று மகாதீர் கூறினார்.

GTA பிரதிநிதிகள், வஞ்சம் நிறைந்த எந்தவொரு தனிநபருடனும் வேலை செய்வதை விட எதிர்க்கட்சியாக இருப்பது நல்லது என்று அவர் நினைத்தார்.

இதற்கிடையில், GTA பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், வேகம் அதிகரித்து வருவதாகவும் கூறிய முன்னாள் பிரதமர், கூட்டணிக்குச் சில இடங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக அவர் நம்புகிறார்.