சோசியலிஸ்ட் கட்சியின் தோழர் நேருவின் மறைவு, ஈடுகட்ட இயலாத இழப்பு

தோழர் ஆர் நேரு (1951-2022), கடந்த நவம்பர் 11ஆம் தேதி கோலாலம்பூரில் காலமானார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றுவந்த அவருக்கு வயது 71. அவரது திடீர் மறைவு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுதந்திரத்திற்கு முந்தைய மலாயாவில் பிறந்த அவர், தேசத்தைக் கட்டியெழுப்பும் காலத்தில் வளர்ந்தார், அரசியலில் மும்முரமாக ஈடுபட்டவர்.

அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் அவரது வெளிப்பாடு ஆரம்பத்திலேயே தொடங்கியது. இவருடைய தந்தை, ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி. சமூகத்தில் சாதி மற்றும் வர்க்கப் பிளவுக்கு எதிராகவும், மூடநம்பிக்கையான மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும் திராவிடக் கழகத்தின் சமூக சீர்திருத்த இயக்கத்தை பின்பற்றியவர்.

இது குழந்தைப் பருவம் முதலே இவரின் மதிப்புகளையும் சமூக உணர்வையும் வடிவமைத்தது என்பதில் சந்தேகமில்லை. தனது குழந்தைகள் , நேரு, காந்தி மற்றும் அண்ணாதுரை, முக்கிய நபர்களின் பெயரால் அழைக்கப்பட்டனர். நேருவின் மூத்த சகோதரர் துரைராஜ், தோட்டத் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளில் அக்கறை கொண்டு, ஹெவூட் எஸ்டேட் NUPW கமிட்டியின் தலைவரானார்.

நேருவின் அரசியல் ஆர்வம் அவரை 1970களில் மஇகா உறுப்பினராக்கியது. ஆனால் ஒரு காலத்தில் முற்போக்கான அமைப்பின் ஆரம்ப இலட்சியங்கள் காலப்போக்கில் சுயநலம், ஊழல் தொடர்புடைய ஒரு கட்சியாக மங்குவதைப் பார்த்து அவர் விரக்தியடைந்தார்.

1980 களின் முற்பகுதியில் ‘அலைகள்’ என்ற ஒரு குழுவுடன் இணைந்தார். இந்த குழு மலாயா பல்கலைக்கழக மாணவர் சமூக நல அணி திட்டத்தில் பங்கு பெற்ற ஜெயகுமார், ராணி ஆகியோரால் தோட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வி குழுக்களை அமைத்து அதன் வழி சேவையாற்றினர்.

தோட்டங்களில் உள்ள குழந்தைகளின் மிக மோசமான கல்வித் தரத்தை நிவர்த்தி செய்ய உதவும் வகையில் கல்வி குழுமம் தொடங்கப்பட்டது. இந்த குழு தோட்டங்களில் கல்வியை மட்டும் கொடுக்க விரும்பவில்லை, மாறாக ஒரு பெற்றோர் குழுவை உருவாக்கியது. அதன் வழி தொழிலாளர் விழிப்புணர்வுக்கான கல்வியும் உருவானது. இந்தப் பணியில் நேரு முக்கிய பங்காற்றினார்.

பல வகையான திட்டங்கள் – பயிற்சி வகுப்புகள் மற்றும் மழலையர் பள்ளிகள், வழக்கமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமர்வுகள், கச்சேரிகள் மற்றும் நாடகங்கள் போன்ற கலாச்சார செயல்பாடுகளை உள்ளடக்கிய 10 ஆண்டுக்கால சுறுசுறுப்பான கல்வி குழு வேலையின் முடிவில் – சமூக விழிப்புணர்வின் தாக்கம் மாற்றுச் சிந்தனைக்கு வித்திட்டது. கல்வி – குடும்ப வருமானம், எஸ்டேட் பள்ளிகளில் வசதிகள் மற்றும் நெருக்கடியான வீடுகள் இதன் வழி உருவாகும் ஒரு ஏழ்மை பண்பாடு – இவற்றுக்கான தீர்வு கல்வி வழியால் கிடைக்குமா? என்ற வினாவை எழுப்பினார் நேரு.

அப்போதுதான் தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த பொருளாதார உடன்படிக்கைக்கான பிரச்சாரத்தைத் தொடங்க அலைகள் அமைப்பை உருவாக்க முடிவு செய்தோம். அலைகள் மூலம் எங்கள் பணி ஈப்போ மற்றும் பிற இடங்களுக்கு விரிவடைந்ததது.

புறநகர் முன்னோடிகள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் உற்பத்தி தொழிலாளர்கள் போன்ற விளிம்பில் குறைந்த வருமானத்தில் வாழும் சமூகங்களிடையே ஒருங்கிணைப்பு பணிகளுக்கு அலைகள் அமைப்பில் நேரு சிறிது காலம் பகுதி நேர பணியாளராக இருந்தவர்.

1996 ஆம் ஆண்டில், அவர் தனது நாற்பதுகளில் இருந்தபோது, நேரு தனது குடும்பத்தைப் பராமரிக்கக் கோலாலம்பூருக்கு வந்தார். அவரது மனைவி கமலா, நான்கு குழந்தைகளான, சந்திரவர்மன், சந்திர சூரியா, கோகிலாபாலன் மற்றும் ரகுனாவதியுடன் சேரஸில் குடியேறினர்.

நேருவுக்குத் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதும் பற்று இருந்தது, அவர் மற்ற அலைகள் உறுப்பினர்களுடன் இணைந்து , ஒதுக்கப்படும் சமுதாயம் (கார்டூன் புத்தகம்) மற்றும் எழுச்சி ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.1999 பொதுத் தேர்தலில் சாமிவேலுவுக்கு எதிராகச் சுங்கை சிப்புட் தொகுதியில் ஜெயகுமார் நின்ற போது, குமாருக்கு பிரச்சார மேலாளராக இருந்தவர் நேரு.

சுமார் 5 வருட தீவிர அலைகல் பணிக்குப் பிறகு, சமூக மேம்பாட்டு மையம் மற்றும் சுவரா வர்கா பெர்திவி போன்ற அமைப்புகளுடன் செயலாற்றினார். சமூகத்தின் ஏழ்மையான பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் கண்டோம். அந்தப் பயணத்தில் நேரு எங்களுடன் மலேசிய சோசியலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார், பின்னர் காஜாங் கிளையின் தலைவரானார்.

நேரு பழகுவதற்கு ஒரு நல்ல நல்ல நண்பர், நகைச்சுவை உணர்வு கொண்ட அவரின் சிரிப்பு கூடியிருப்போரையும் தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. அவர் மறைந்தும் மறையாத நினைவுகள்
ஆளுமையுடன் ஓய்வெடுங்கள் தோழரே, போராட்டம் அது தொடரட்டும்.

  • ராணி ராசையா