இடைகால பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நவம்பர் 18 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகள் பொது விடுமுறை தினங்களாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
“வாக்காளர்களை எளிதாக்குவதற்காக வெள்ளி மற்றும் சனிக்கிழமை பொது விடுமுறை தினங்களாக அரசு முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.
மலேசியா நாட்டின் 15 வது பொதுத் தேர்தலுக்கான சனிக்கிழமை வாக்கெடுப்புக்கு செல்லும், நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
“முப்பது நெடுஞ்சாலை சலுகைதாரர்களும் அந்த இரண்டு நாட்களில் தங்கள் சாலைகளைக் கட்டணமில்லா சாலைகளாக மாற்ற ஒப்புக் கொண்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
கூடுதலாக, இஸ்மாயில் சப்ரி அரசு ஊழியர்களுக்கான நவம்பர் மாத சம்பளம் நவம்பர் 17 ஆம் தேதியும், ஓய்வூதியங்கள் நவம்பர் 14 ஆம் தேதியும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.