1978 முதல், பகோ தொகுதி அதன் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முகைடின் யாசினுக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பான கோட்டையாக இருந்து வருகிறது, எட்டு முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 1986 முதல் 1995 வரை அவர் ஜொகூரின் மந்திரி பெசாராக இருந்தார்.
முகைடினின் வெற்றிகளுடன் பகோ ஒரு BN கோட்டை என்ற கருத்து வந்தது – ஆனால் பதவியில் இருப்பவர் 2018 இல் பக்காத்தான் ஹராப்பான் கீழ் மூன்று முனை மோதலில் 55.2% வாக்குகளுடன் மீண்டும் அந்த இடத்தை வென்றபோது இது தவறு என்பதை நிரூபித்தார்.
இம்முறை பெரிகத்தான் நேசனல் (PN) சின்னத்தில் போட்டியிடும் அவர், மீண்டும் வாக்காளர்களை விசுவாசமாக இருக்கச் செய்ய முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
2018 இல், முகைடின் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றார். அவர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், இந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு தாமான் பகோ ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் சுமார் 50 இந்திய வாக்காளர்களுடன் ஒரு சிறிய சந்திப்பு மற்றும் வாழ்த்துச் செய்தி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாகும்.
56 வயதான ஜே.லக்ஷ்மி கலந்து கொண்டவர்களில் ஒருவர், இந்த நிகழ்வின்போது மலேசியாகினியிடம், பல தசாப்தங்களாக முகைடினுக்கு விசுவாசமாக இருந்தவர்களில் தானும் ஒருவர் என்று கூறினார்.
“அவர் எப்பொழுதும் எங்களுக்கு உதவுகிறார், உணவு கொடுக்கிறார். அவர் ஏழைகளுக்குக் கூட உதவுகிறார், ”என்று அவர் கூறினார்.
இருப்பினும், மேலும் உரையாடலின்போது, முகைடின் இனி ஹராப்பானின் கீழ் போட்டியிடவில்லை என்பதையும், ஹராப்பான் தனது சொந்த வேட்பாளரான இஸ்கந்தர் ஷா அப்துல் ரஹ்மானை ஹராப்பான் களமிறக்கியிருப்பதையும் கண்டு லக்ஷ்மி அதிர்ச்சியடைந்தார்.
கட்சி மாறினாலும் முகைடினைத் தேர்ந்தெடுப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த காலத்தில் தான் எப்போதும் முகைடினுக்கு வாக்களித்ததாக மீண்டும் கூறினார்.
புக்கிட் பாசிரில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில், கோ என்று மட்டுமே அறியப்பட ஒருவர், முகைடினுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று தெளிவுபடுத்தினார்.
ஹராப்பான் ஆதரவாளருக்கு, ஒரு வேட்பாளரைவிட ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது, ஏனெனில் அது வாக்காளர்களுக்கு ஒற்றுமையை அளித்தது, இது கட்சி அதிகாரத்தைப் பெற உதவும்.
“மற்ற முன்னேறிய நாடுகள் எப்போதும் அப்படித்தான். பெரும்பாலான முன்னேறிய நாடுகளும் இந்த விதியைப் பின்பற்றுவதை நீங்கள் காணலாம்”.
“எனவே, தேர்தலின்போது தனிநபர்களின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெற்றி பெற்றாலும், உங்களால் உங்கள் இடத்திற்கு மட்டுமே சேவை செய்ய முடியும், முழு நாட்டிற்கும் எதுவும் செய்ய முடியாது, ”என்று கோ மலேசியாகினியிடம் கூறினார்.
மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவு பெரும்பாலும் ஹரப்பானிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, BN தகவல் தொடர்பு இயக்குனர் அஹ்மத் ஷபேரி சீக்கும் முகைடின் தனது பிரபலத்தைக் குறிப்பாகச் சீன வாக்காளர்கள் மத்தியில் இழந்து வருவதாகக் கூறினார்.
சீன வாக்காளர்களின் ஆதரவு இல்லாமல், அடுத்த நாடாளுமன்ற பதவிக்காலம் முடிந்த பின்னர் ஓய்வு பெறும் முகைடினின் திட்டம் அவர் விரும்புவதை விட விரைவில் தொடங்கலாம்.
பகோவின் பி.கே.ஆர் வேட்பாளர் இஸ்கந்தர் ஷா –அவரது போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் எந்த முன் அரசியல் அனுபவமும் இல்லாதவர்-இதை அதிகம் பயன்படுத்திக் கொள்ள முற்படும் ஒரு சூழ்நிலை இதுவாகும்.
இஸ்கந்தர் கணிப்பிபடி முகைடின் அனைவரும் எதிர்பார்த்த அளவுக்கு வலிமையானவர் அல்ல. GE14 இல் முகைடின் BN இலிருந்து 6,000 வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும், மலாய்காரர்கள் அல்லாத வாக்காளர்களை நம்பி அந்த இடத்தை வென்றதாகவும் அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், அங்குள்ள வாக்காளர்களில் 66% பேர் மலாய்க்காரர்கள், 30% சீனர்கள் மற்றும் 4% இந்தியர்கள்.
வாக்குப்பெட்டியில், 55.2% வாக்குகள் முகைடினுக்கும், 39% வாக்குகள் BN-க்கும், 5.8% வாக்குகள் பாஸ் கட்சிக்கும் கிடைத்தன.
இப்போது, பாகோவில் 69,939 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், 2018 உடன் ஒப்பிடும்போது சுமார் 18,000 பேர் அதிகம்.
அவரது கணக்கீடுகளின் அடிப்படையில், இஸ்கந்தர் சுமார் 10 சதவீத புதிய வாக்காளர்களையும் 10 சதவீத மலாய் வாக்காளர்களையும் பெற முடியும் என்று எதிர்பார்க்கிறார்.
முஹைதினிடமிருந்து BN போதுமான மலாய் வாக்குகளைப் பெற்றால் குறுகிய வெற்றியைப் பெறலாம். இருப்பினும், இந்தப் பணி இன்னும் கடினமாக உள்ளது.