இஸ்மாயில்: தேவைப்பட்டால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கச் சிறப்பு வரவு செலவுத் திட்டத்தை இடைக்கால  அரசு தாக்கல் செய்யும்

இடைக்கால பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இடைக்கால அரசாங்கமும் அமைச்சரவையும் அவரது தலைமையின் கீழ் தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.

“எனவே, முன்னாள் அரசாங்கம் இன்னும் ‘இடைக்கால அரசாங்கமாக’ இருப்பதால், அரசாங்கம் இல்லை என்பதைப் போல மக்கள் குழப்பமடையக் கூடாது”.

“உண்மையில், 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடாதவர்கள் அல்லது தோல்வியடைந்தவர்கள், அவர்கள் இனி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாததால், அமைச்சரவை கூட இன்னும் ‘தற்காலிக அமைச்சரவையாக’ செயல்படுகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்காக விசேச நாடாளுமன்றக் கூட்டத் தொடர், வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவுள்ளதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

சிறப்பு நாடாளுமன்ற அமர்வு விவாதங்கள் எதுவும் நடைபெறாமல் சுருக்கமான அமர்வாக இருக்கும் என்றும், அரசு ஊழியர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், சம்பளம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான சம்பளத்தைப் பெறுவதை உறுதிசெய்ய டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.