நாடு முழுவதும் முக்கிய இடங்களில் சாலைத் தடுப்புகள்

குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேரமும் தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.

நெரிசல் நேரத்திலோ அல்லது பகல் நேரத்திலோ சாலைத் தடைகள் அமல்படுத்தப்படாது என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நெரிசல் உண்டாகும் காலை மற்றும் மாலை நேரங்களில்  இந்த சாலைத் தடைகளை கடந்து செல்லும் போது பொதுமக்கள் ஒத்துழைத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

சாலைத் தடைகள் குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கூறிய அக்ரில் சானி, தேசத்தின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யும் வேளையில் அவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று அவரை கூறினார்.

-FMT