BN மற்றும் PN தலைவர்கள் இன்று சந்திக்கிறார்கள்

கோலாலம்பூரில் உள்ள செயின்ட் ரெஜிஸ் விடுதியில் இன்று பிற்பகல் பெரிகத்தான் நேசனல் (PN) மற்றும் BN  தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.

அம்னோவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் BN தரப்பில் துணைத் தலைவர் முகமது ஹசன் (மேலே, வலது), MCA தலைவர் வீ கா சியோங், மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் மற்றும் பார்டி பெர்சத்து ராக்யாட் சபா (PBRS) துணைத் தலைவர் ஆர்தர் ஜோசப் குருப்(Arthur Joseph Kurup) ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று தெரிவித்தன.

PN தலைவர் இன்று பிற்பகல் 3 மணிக்குச் செயின்ட் ரெஜிஸ் (St Regis) விடுதியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஒரு தனி ஆதாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

இன்று காலை யாங் டி-பெர்துவான் அகோங் வழங்கிய BN இன் உயர்நிலை அதிகாரிகளின் சந்திப்புகளைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.

பக்காத்தான் ஹராப்பனோ அல்லது PN னோ ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்ற நிலையில், ஞாயிற்று கிழமை முதல் BN கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்று காலை மன்னரின் சந்திப்பிற்குப் பிறகு, ஜாஹிட் மலேசியாகினியிடம், BN ஒரு ஐக்கிய அரசாங்கத்தில் பங்கு கொள்ளுமாறு மன்னர் ஆணையிட்டார் என்று கூறினார்.

இந்த நிலையில், இந்த ஐக்கிய அரசாங்கத்தை யார் வழிநடத்துவது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

திங்களன்று, BN உயர்நிலைத் தலைவர்கள் தங்கள் ஹராப்பான் சகாக்களுடன் ஒரு உடன்படிக்கைக்கான சாத்தியக்கூறுபற்றி விவாதிக்க ஒரு சந்திப்பை நடத்தினர்.

அந்தச் சந்திப்பின் முடிவு நிச்சயமற்றது.

நேற்றிரவு நிலவரப்படி, பல BN உச்ச சபை உறுப்பினர்கள் கூட்டணியின் நிலைப்பாடு நடுநிலையை கடைப்பிடிப்பதாகக்  கூறினர்.