மாமன்னருடன் பிரதமருக்குச் சந்திப்பு வழங்கப்பட்டது

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு இன்று மாலை இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்துவான் அகோங், சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா உடன் சந்திப்பு வழங்கப்பட்டது.

கடந்த வியாழன் அன்று 10வது பிரதமராக அன்வார் நியமிக்கப்பட்ட பிறகு, மாலை 5 மணிக்குத் தொடங்கிய கூட்டம் இதுவே முதல் முறை என்று அரண்மனை தெரிவித்துள்ளது.

“மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த அமர்வு, அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், நவம்பர் 24 அன்று இஸ்தானா நெகாராவில் நடந்த நிகழ்வில் அவரது பதவியேற்புக்குப் பிறகு முதல் அமர்வு ஆகும்,” என்று அரண்மனை முகநூலில் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை அறிக்கையில் குறிப்பிடவில்லை.

முன்னதாக மலாய் ஆட்சியாளர்களின் பேரவை ஒரு கூட்டத்தை நடத்திய பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

மன்னருடனான  இன்றைய அமர்வுக்கும் புதிய அமைச்சரவை அமைப்பதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று கேட்பது உட்பட, ஊடகப் குழுவினருக்கான பிரதமரின் அதிகாரப்பூர்வ புலனக் குழுவில் கருத்து தெரிவிக்க மலேசியாகினி கோரிக்கையை அனுப்பியுள்ளது.