இன்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து கோலாலம்பூர் நகர மையத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) மற்றும் கட்டுப்பாட்டு மையம், சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலை, ஜாலான் குச்சிங், ஜாலான் பார்லிமென், ஜாலான் ராஜா சூலன், ஜாலான் புது, ஜாலான் மகாராஜலேலா, ஜாலான் பங்சார் மற்றும் ஜாலான் மாரோஃப் உள்ளிட்ட டிபிகேஎல் கோபுரத்தைச் சுற்றியுள்ள பல முக்கிய சாலைகளில் நீர் பெருகியது.
கிழக்கு-மேற்கு இணைப்பு விரைவுச் சாலையில் (சலாக் விரைவுச் சாலை) தாமன் கன்னாட், சேராஸை தொடர்ந்து பந்தர் துன் ரசாக் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) வரை எட்டு மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.