அன்வார்: பொருளாதாரம் மீண்டு வரும் வரை அமைச்சரவை சம்பளம் 20% குறைக்கப்பட்டது

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்களின் மாதாந்த சம்பளத்தில் 20% சம்பளத்தை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்குறித்து அமைச்சரவை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அக்கறையின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் வரை சம்பளக் குறைப்பு அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் என்று அன்வார் கூறினார்.

“நாங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டியதில்லை, ஆனால் சிறிது தியாகம் செய்யத் தயாராக இருந்த அமைச்சரவைக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

புத்ராஜெயாவில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர் என்ற முறையில் சம்பளம் வாங்காத அன்வார், அதற்குப் பதிலாக நிதி அமைச்சர் என்ற முறையில் தனக்கு ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறுவதை மறுத்தார்.

“அன்வார் பிரதமரின் சம்பளத்தை வாங்கவில்லை, நிதியமைச்சரின் சம்பளத்தை வாங்கினார் என்று சிலர் கூறுகிறார்கள்”.

“அது உண்மையல்ல, ஒரே ஒரு சம்பளம் (பல பதவிகள் இருந்தாலும் கூட),” என்று அவர் கூறினார்.