நிலையான பட்ஜெட்டை உருவாக்க பணியாற்றி வருகிறோம் – ரஃபிஸி

2023 ஆம் ஆண்டிற்கான நிலையான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு இது மிக முக்கியமான பணிகளில் ஒன்றாகும் என்று கூறிய ரஃபிஸி, இது குறித்து நிதியமைச்சகத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

“அடுத்த இரண்டு மாதங்களில் நாங்கள் இந்த் பணியில் முழுவதுமாக ஈடுபடுவோம்” . முந்தைய அரசு அறிவித்த பட்ஜெட்டை விட சிறியதா அல்லது பெரியதா என்ற கேள்விக்கு, நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.”நாங்கள் பொருளாதார விவகார அமைச்சகத்தில் செய்வது நீண்ட கால திட்டமிடலில் கவனம் செலுத்துவது மட்டுமே”,  என்று அவர் கூறினார்.

அக்டோபரில், அப்போதைய நிதியமைச்சர் டெங்கு ஜஃப்ருல் அஜீஸ் 2023 ஆம் ஆண்டிற்கான 372.3 பில்லியன் ரிங்கிட் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ஆய்வுகள் மையம் ஓன்று , பட்ஜெட்டில் பல தற்காலிக நன்மைகள் இருப்பதாகக் கூறியது, புத்ராஜெயா தனது அதிக செயல்பாட்டு செலவினங்களை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியது.

சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டியை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்துமா என்ற கேள்விக்கு ரஃபிஸி, இது நிதி அமைச்சரின் மற்றொரு முடிவு என்பதால் அதைச் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

“நிதி அமைச்சகத்திற்கான காட்சிகள், திட்டமிடல் மற்றும் கணிப்புகளை வழங்குவதே இங்கு எங்களின் பங்கு.

“வருவாயின் அடிப்படையில் நமது மதிப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது பற்றிய முடிவு அரசாங்கமாக கூட்டாக எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பொருளாதார விவகாரங்கள் அமைச்சகம் அரசாங்கத்தின் வருவாயை “இன்னும் வலுவானதாக” உறுதி செய்யும் என்று ரஃபிஸி கூறினார்.

-FMT