முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சரான, அம்னோ பிரிவு தலைவர் அனுவார் மூசா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடந்த அம்னோ சுப்ரீம் கவுன்சில் கூட்டத்தில் பதவி நீக்கம் செய்ய முடிவு செய்த மூன்று கட்சிப் பிரிவுத் தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை மலேசியாகினி அறிந்தது.
“கட்சியை இழிவுபடுத்தியதற்காகவும் (எதிர் கட்சிக்காக) பிரச்சாரம் செய்ததற்காகவும் மூன்று பேர் – இரண்டு பெண்கள் பிரிவு தலைவர்கள் மற்றும் ஒரு பிரிவு தலைவர் – பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி நேற்று இரவு கூறினார்.
புவாட் (மேலே), மேலும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்த நிலையில், பேசிய மற்ற இரண்டு அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அனுவாரும் ஒருவர் என்பதை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினர்.
முந்தைய பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ரிம 6,000 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விசாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, உச்ச கவுன்சில் அதை பிரதமர் அன்வார் இப்ராஹிமின் விருப்பத்திற்கே விட்டுவிட்டது என்றார்.
மற்றொரு விஷயத்தில், முன்னாள் அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ் மற்றும் தபுங் ஹாஜியை விசாரிக்க அரச விசாரணை ஆணையங்களை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கவுன்சில் ஒப்புக்கொண்டதாக புவாட் கூறினார்.
தாமஸ் மீதான முன்மொழியப்பட்ட அரசு விசரணை அவரது புத்தகமான ‘எனது கதை – கானகதில் கண்ட நீதி’ (மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்) பற்றியது.
“தாமஸ் மற்றும் தபுங் ஹாஜிக்கு எதிராக அரசு விசரணை தொடருவது பற்றியும், முன்னாள் பேங்க் நெகாரா கவர்னர் ஜெட்டி அக்தர் அஜீஸ் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் நாங்கள் விவாதித்தோம்” என்று அம்னோவின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் உச்ச கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு புவாட் செய்தியாளர்களிடம் கூறினார்.
கூட்டத்திற்கு அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தலைமை தாங்கினார், அவர் துணைப் பிரதமரும் ஆவார்.
2014 முதல் 2020 வரையிலான நிதியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை ஆராய்வதற்காக ஜனவரி 21 அன்று தபுங் ஹாஜி மீதான அரசு விசாரணை நிறுவப்பட்டது. இது ஆறு மாதங்களுக்குள் அதன் கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கையை யாங் டி-பெர்டுவான் அகோங்கிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அம்னோ, தாமஸின் நினைவுக் குறிப்பு நூலில் உள்ள வெளிப்பாடுகளை விசாரிக்க அரசு விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறது, அதில் நீதிமன்ற தீர்ப்புகளில் தலையிட முயன்றவர்களின் கதையும் உள்ளதாம்.