“Ops Tapis Khas” என்று அழைக்கப்படும் போதை மருந்து எதிர்ப்புச் சிறப்பு நடவடிக்கையின் கீழ் இந்த ஆண்டு 28,710 நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர், அவர்களில் 64.5% பேர் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் அல்லது அடிமையானவர்கள்.
இன்று காலை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் வெளியிடப்பட்ட காவால்துரை தரவுகளின்படி, ஜனவரி முதல் டிசம்பர் வரை, 16,433 நபர்கள் (57.2%) போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 2,102 (7.3%) ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் பிரிவு 39 (C) இன் கீழ் மீண்டும் குற்றவாளிகளாக இருந்தவர்கள்.
கைதுச் செய்யப்பட்டவர்கள் எந்த வகையான போதைப்பொருளைப் பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அஸலினா ஒத்மான்
முன்னதாக, 2021 நவம்பரில், முன்னாள் சட்ட அமைச்சர் அசலினா ஒத்மான் சையட்(Azalina Othman Said), சிறை கைதிகளில் 63% பேர் சிறிய போதைப்பொருள் குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தினார்.
அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தின் கீழ் சட்ட இலாகாவிற்கு, நிறுவன சீர்திருத்தங்களுக்கான கூடுதல் கடமைகளுடன் அஸலினா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
19.8 மில்லியன் ரிங்கிட் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
இதற்கிடையில், Ops Tapis Khas இன் கீழ், 4,498 கைதுகள் (15.7%) விற்பனையாளர்கள் மற்றும் 1,685 (5.9%) தேடப்படும் பட்டியலில் இருந்தனர்.
கூடுதலாக, 848 பேர் (2.9 %) ஆபத்தான மருந்துகள் சட்டம் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 3,144 பேர் (10.9%) குறிப்பிடப்படாத பிற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
19.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 2.2 டன் போதை மருந்துகளும், 4,966 லிட்டர் பல்வேறு மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை செயலாளர் நூர்சியா முகமட் சாதுடின்(Noorsiah Mohd Saaduddin) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை ஆப்ஸ் டாபிஸ் காஸின்(Ops Tapis Khas) கீழ் கைது செய்யப்பட்ட 28,710 பேரில், டிசம்பர் 6 முதல் 8 வரை ஃபெல்டா, ஃபெல்க்ரா, குறைந்த கட்டண பொது வீடுகள், படகுத்துறைகள் மற்றும் மறைவிடங்கள் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலின்போது 4,177 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில், 484 (11.6%) விற்பனையாளர்கள், 307 (7.3%) தேடப்படும் நபர்கள், 1,982 (47.5%) பயனர்கள், 1,404 (33.6%) பேர் குறிப்பிடப்படாத பிற குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.