வாய்ப்புகளை தேடி சிங்கப்பூர் செல்லும் மலேசியா சிறந்த மருத்துவ பட்டதாரிகள்

யுனிவர்சிட்டி மலாயா தனது “சிறந்த மற்றும் சிறப்பான” மருத்துவ பட்டதாரிகளில் குறைந்தது 30 பேரை ஒவ்வொரு ஆண்டும்  இழக்கிறது என்று யுனிவர்சிட்டி மலாயாவின் மருத்துவ குழுவின் முன்னாள் தலைமை டாக்டர் அதீபா கமருல்ஜமான் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார அமைப்பை மேம்படுத்த மலேசியாவில் உள்ள மருத்துவ அதிகாரிகள் மற்றும் பட்டதாரிகளின் பணியை நிரப்ப வேண்டிய அவசர தேவை இருப்பதாக அதீபா ட்விட்டரில் தெரிவித்தார்.

டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களுக்கான பதவிகள் மற்றும் தெளிவான பயிற்சி பாதைகள் இல்லாததால், அவர்கள் வேலைக்காக அல்லது சிறந்த வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளை செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

“இப்போது, நாங்கள் எங்கள் மருத்துவ அதிகாரிகளை இங்கிலாந்துக்கு அனுப்புவதன் மூலம் யுனைடெட் கிங்டமில் தேசிய சுகாதார சேவை  பற்றாக்குறையைப் போக்க உதவப் போகிறோம்.”

“எனது இளம் சக ஊழியர்களை நான் குறை கூறவில்லை. வாய்ப்புகள் உள்ள இடத்திற்கு நானும் செல்வேன்”. நாம் அவர்களைத் தோல்வியடையச் செய்கிறோம்.

“எங்களிடம் இந்த தொடர்ச்சியான உள் மற்றும் வெளிப்புற தோய்வு  இருக்கும்போது, ஒரு முழுமையான மற்றும் உலகத் தரம் வாய்ந்த சுகாதார அமைப்பை எவ்வாறு உருவாக்குவோம் என  எதிர்பார்க்கலாம்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜா பெர்மைசூரி பைனுனின் மருத்துவமனைஅவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப் படுக்கைகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் ஆறு நாட்கள் வரை விடப்பட்டதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.

தொற்று நோய் நிபுணரான அதீபா, மலேசியாவில் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை இந்தப் பிரச்சினை “என்றென்றும்” தொடரும் என்று கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சுகாதார அவசரநிலை மலேசியாவின் பொது சுகாதார அமைப்பில் உள்ள பிரச்சினைகள், குறிப்பாக மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த மருத்துவர்களின் அவலநிலை குறித்து கவனத்தை ஈர்த்தது.

#HartalDoktorKontrak எனப்படும் ஒரு சமூக ஊடகப் பிரச்சாரம் 2021 இல் ஆதரவு பெறத் தொடங்கியது, இறுதியில் ஒப்பந்த மருத்துவர்கள் தங்கள் நிரந்தர வேலை வாய்ப்பு பிரச்சினையில் வேலைநிறுத்தம் செய்ய வழிவகுத்தது.

பின்னர் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பிப்ரவரி மாதம் 4,186 சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார அமைச்சகத்தில் ஜூன் முதல் நிரந்தர பதவிகளுக்கு தேர்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

2023 முதல் 2025 வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1,500 மருத்துவர்களுக்கு நிரந்தர பணியிடங்களை திறக்க அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக கைரி கூறினார்.

தற்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா, பொதுத் துறையில் நிரந்தரப் பதவிகளுக்காகப் போராடும் ஒப்பந்த மருத்துவர்களின் அவலநிலையைத் தீர்ப்பதே தனது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

-FMT