விளையாட்டாளர்களை அறைந்த கைப்பந்து பயிற்சியாளர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்

ஜொகூரில் நடைபெற்ற போட்டியில் இரண்டு இளம்பெண்களை அறைந்த கைப்பந்து பயிற்சியாளர், தனது நடத்தைக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

44 வயதான சைபுல் ஹதீ அமர், தனது செயலுக்கு வருந்துவதாகவும், டிசம்பர் 16 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் காயங்களை ஏற்படுத்த விரும்பவில்லை, எனது செயல் ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் உள்மனதை  தூண்டி அவர்களை ஊக்கப்படுத்துவற்காகும்.

எல்லா விளையாட்டாளர்களிடமும், குறிப்பாக சம்பந்தப்பட்ட இருவரிடமும், அவர்களின் பெற்றோர்கள், எனது சொந்த கிளப் மஸ்தானா மற்றும் மலேசிய கைப்பந்து சங்கம்  மற்றும் மலேசியாவில் உள்ள கைப்பந்து சமூகம் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், என்று அவர் மலாக்கா மாநிலத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் மலாக்கா மாநில இளைஞர் மேம்பாடு, விளையாட்டு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாக கவுன்சிலர் வி.பி.சண்முகம், தேசிய விளையாட்டு கவுன்சில் எம்எஸ்என் இயக்குநர் ஜெனரல் அஹ்மத் ஷபாவி இஸ்மாயில் மற்றும் மலாக்கா எம்எஸ்என் இயக்குனர் அஸ்ரி நிங்கல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இரு வீரர்களின் பெற்றோரும் உடனிருந்தனர்.

சைபுல் தனது வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, உளவியல், தீவிரம் மற்றும் உடல் ரீதியான பல்வேறு வகையான அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறார்.

ஒவ்வொரு வெற்றிக்காகவும் போராடும் ஒரு வீரராக அவர்களின் உணர்வை உயர்த்துவதற்காக நான் இதைச் செய்கிறேன், வீரர்கள் எனது குடும்பம் மற்றும் எனது வலிமையின் ஆதாரம், அவர்கள் இல்லாமல் நான் ஒரு பயிற்சியாளராக இருக்க முடியாது.

எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இது எனக்கே பாடமாக இருக்கும் என நம்புகிறேன், என்றார்.

இதற்கிடையில், சைபுலுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் மாவாவின் விசாரணைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று சண்முகம் கூறினார்.

விசாரணையின் முடிவைப் பொறுத்து, சைபுல் மலாக்கா U-14 பெண்கள் கைப்பந்து அணியின் பயிற்சியாளராக இடைநீக்கம் செய்யப்படலாம் அல்லது நீக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

பயிற்சியாளருக்கும் பெற்றோருக்கும் இடையே மன்னிப்பு மற்றும் புரிதல் இருந்தபோதிலும், இந்த பிரச்சினை பல்வேறு தரப்பினரின் கவனத்தைப் பெற்றுள்ளதால், சரியான முறையில் விசாரிக்கப்பட வேண்டும்.

முதலாவதாக, வைரலான வீடியோ தொடர்பாக மாநில அரசின் விசாரணையும், இரண்டாவதாக அவர் கல்வி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றினார் எனவே அதன் ஒருமைப்பாடு பிரிவு மேலும் விசாரணையை நடத்தும், என்று சண்முகம் கூறினார்.

.

 

-FMT